பக்கம்:ஆண் சிங்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


மாட்டமும் நாகரிகமும் முட்டி மோதிய கடைவீதி வழியாக, பெரிய ஹைரோடு வழியாக ஓடியது. டவுணுக்குள் பிரவேசித்தது. பெரிய வீதிகளில் சென்றது.

‘அதிசய உலகத்தில் புகுந்த அலைஸ்’ மாதிரி, வியப் பால் விரிந்த கண்களோடு வள்ளி அம்மை எல்லாவற் றையும் விழுங்கினாள். ஏயம்மா, எவ்வளவு கடைகள்: என்னென்ன சாமான்கள்; என்ன பகட்டு: எத்தனை ரகப் பட்டாடைகள்! வர்ண விஸ்தாரங்கள்... அவள் பிரமித்துவிட்டாள்...

‘என்னம்மா இறங்கலியா? நீ கொடுத்த நாலரையணா செமிச்சுப் போச்சு’ என்றான் கண்டக்டர்.

‘நான் இறங்கலே. இதே காரில் திரும்பப் போறேன். இந்தா நாலரையணா என்று, சட்டைப் பையிலிருந்த அணாக்களை எடுத்து நீட்டினாள் வள்ளி.

அவன் அந்தச் சிறுமியை அதிசயமாகப் பார்த்தான். ஏன், என்ன விஷயம்?’ என்றான்.

ஒண்னுமில்லே. காரிலே வரணும்னு நினைச்சேன், அதுதான்.”

‘கீழே இறங்கி, ஊரைப் பார்க்கணும்கிற ஆசை இல்லையா? என்று அவன் கேட்டான்.

‘ஒத்தையிலேயா? அடியம்மா எனக்கு பயமாயிருக்குமே என்றாள் வள்ளி. அவள் அதைக் கூறிய விதமும், காட்டிய முகபாவமும் அவனுக்கு இனித்தன. ‘காரிலே வாறதுக்கு மட்டும் பயமாக இருக்கலியோ’

‘இதிலே என்ன பயம்’ என்று சவாலிட்டாள் சிறுமி.

‘சும்மா கீழே இறங்கி, அந்த ஓட்டலுக்குள்ளே போயி, காபி சாப்பிடு. பயம் ஒண்னும் ஏற்படாது’ என்றான் கண்டக்டர்.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/61&oldid=1072152" இலிருந்து மீள்விக்கப்பட்டது