பக்கம்:ஆதி அத்தி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 99 யதைக் கேட்டு நீங்கள் மனமிரங்கி வந்திருக்கிறீர்கள்எனது கணவரைக்கொடுத்து விடுங்கள்-இல்லாவிட்டால்.. மருதி (சட்டென்று) வெள்ளத்திலே அடித்துக் கொண்டு போனவரை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் ஏதோ மனம் பேதலித்துப் பேசுகிறீர்கள்... ஆதிமந்தி: அவர் இறந்துபோகவில்லை... ஆட்ட னத்தி இறந்துபோகவில்லை-அது எனக்கு நன்முகத் தெரியும்...அவர் உங்களிடத்திலேதான் இருக்கிரு.ர்... அவர் என்ன என் தந்தை கரிகாலனிடம் பரிசாகப் பெற்ருர்-நீங்கள் இன்று அவரை எனக்குப் பரிசாகக் கொடுத்துவிடுங்கள். ஆதிமந்தி உங்களை நாள்தோறும் பூசை செய்து தொழவில்லையா? அவளுக்கா நீங்கள் துன்பம் கொடுப்பீர்கள்? நான் உங்கள் மகளல்லவா? (மருதிக்கு உண்மை விளங்குகிறது. தன் எதிரிலே சோகமே வடிவாக நிற்பவர் யாரென்றும் இ ல் ல த் தி ல் இருப்பவர் ஆட்டனத்தியே என்றும் தெளிவாகின்றன. அவள் உள்ளம் தடுமாறுகிறது.1 மதி: ஆதிமந்தியா நீங்கள்? அவர் ஆட்டனத் தியா?...இல்லை...இல்லை. இருக்காது... ஆதிமந்தி: நான்தான் ஆதிமந்தி...ஆட்டனத் தியைத் தேடிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்...அவரில் லாமல் எனக்குக் கழார்ப் பட்டணத்திலே வேலையென்ன? காவிரித் தாயை வேண்டி என் கணவனைப் பெற்று வருவ தாக என் தந்தை கரிகாலனுக்குச் சொல்லிவிட்டு வந்தேன். மருதி (மெதுவாகத் தயங்கித் தயங்கி? கணவர் கிடைக்காவிட்டால்... (அவள் முகம் இருண்டு தோன்றுகிறது.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/97&oldid=742490" இலிருந்து மீள்விக்கப்பட்டது