பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஆத்மாவின் ராகங்கள் சொல்லாமல் இருந்தான். பிருகதீஸ்வரன் விடவில்லை. மீண்டும் தொடர்ந்தார்:

'விளையாட்டுக்குச் சொல்லலை ராஜா நிஜமாகவே தான் சொல்றேன்...'

நானும் குருசாமியும் இன்னும் நாலைந்து சத்தியாக்கிரகிகளும் சுதந்திரம் கிடைக்கிறவரை கலி யாணத்தைப் பற்றி நினைக்கிறதில்லேன்னு மீனாட்சியம்மன் கோவிலில் சத்தியம் பண்ணியிருக்கோம். பத்து வருஷத்துக்கு முன்னே நான் இண்டர் முதல் வருஷத்தில் படித்துக் கொண்டிருந்த போது அந்த சத்தியத்தைப் பண்ணினோம். இந்த நிமிஷம் வரை எங்களில் ஒருவரும் அந்தச் சத்தியத்தை மீறவில்லை...' ', -

"அப்படியானால் உனக்குக் கல்யாணம் ஆகறதுக்காக வாவது தேசம் சீக்கிரம் விடுதலையடையணும்னு நான் மீனாட்சியம்மனைப் பிராத்திச்சுக்கிறதைத் தவிர வேறே வழி இல்லை." -- r r

'சத்தியம் பண்ணிட்டோம்! அதைக் காப்பாத்தியாகணும்...'

நான் மறுக்கலியே! சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கணும்னுதானே சொன்னேன்...” - - - -

"சுதந்திரம் கிடைக்கற விஷயத்திலாவது உங்க பிரார்த்தனை பலிக்கனும் சார்'

'பலிச்சா ஒண்னு மட்டும் பலிக்காது ராஜா ரெண்டு பிரார்த்தனையும் சேர்ந்துதான் பலிக்கும்! நீ ரொம்ப பாக்கியசாலி அப்பா இந்தப் பெண் மதுரம் இருக்கே; இதைப் போல ஒரு சுகுணவதியை நான் பார்த்ததே இல்லே, கடவுளின் படைப்பில் மிக உத்தமமான ஜாதி ஏதாவது தனியாக இருக்குமானால், அதில் இவளுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் நான்.'