பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஆத்மாவின் ராகங்கள் டனுப்பிப் பேசினாள். ரத்தினவேல் பத்தரும் கூட இருந்தார்.

அப்போது, 'மங்கம்மா எல்லாம் சொன்னா! நான் சாகறதுக்

குள்ள அந்த வாசகசாலைப் பிள்ளையாண்டானிடம் மது

ரத்தைக் கையைப் பிடிச்சு ஒப்படைச்சுடனும். கலியாணம்னு

நான் வற்புறுத்தலை. எம் பொண்ணை ஒப்படைச்சுக்

'காப்பாத்து அப்பா ன்னு சொல்லிட்டாக் கூட அப்புறம்

நிம்மதியா மூச்சை விடுவேன்.'

தனபாக்கியம் இதைத் தன்னைக் கூப்பிட்டு ஏன் சொல்கிறாள் என்று முதலில் பிருகதீஸ்வரன் தயங்கினார்.

'தம்பிக்குத் துணையா கூட இருக்கிறவங்களிலே நீங்க தான் வயசு மூத்தவங்க. அதான் பெரியம்மா உங்களைக் கூப்பிட்டுச் சொல்றாங்க. தப்பா நினைக்காதீங்க ஐயா, என்று பத்தர் அதை விளக்கினார். அதுதான் சமயமென்று, 'இத்தக் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கறேன். ஆனா அதுக்குப் பதிலா நீங்க ஓர் உபகாரம் பண்ணனுமே பெரியம்மா!' என்று சிரித்துக் கொண்டே மாந்தோப்பு நிலத்தைப்பற்றி ஆரம்பித்தார் பிருகதீஸ்வரன். அவள் கூறிய பெருந்தன்மையான பதில் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

'தாராளமா எடுத்துக்குங்க. சந்தோஷத்தோட பத்திரம் எழுதித் தரச் சொல்றேன்' என்றாள் தனபாக்கியம். ராஜாராமனின் சபதம் நிறைவேற வேண்டியதைப் பற்றியும் பிருகதீஸ்வரன் அவளிடம் கூறினார். அதற்கும் அவள் சம்மதித்தாள். தனபாக்கியத்துக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. . . . . . . .

'ஏதோ நீங்க பெரியவங்க வாக்குக் கொடுத்தாச் சரிதான். எங்க சாதித் தொழில்லே விட இஷ்டமில்லே. நானும் அப்படி வாழலே, ஜமீன்தார் கெளரவமா என்னை வச்சிருந்தார். கெளரவம்ாப் பெத்தேன்; வளர்த்தேன். மறுபடி இந்த நரகத்திலே போய் விழுந்துடாமே கெளரவமா ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டுச் சாகணும். நாகமங்கலம் ஜமீன்தாருக்குப் பொறந்த பொண்ணு ஒண்ணாம் நம்பர்ச்