பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஆத்மாவின் ராகங்கள்

அழுதது. நான் போய் ஆசிரமத்துல சொன்னேன். ஆசிரமம்ே ரொம்பப் பணக் கஷ்டத்திலே இருந்த சமயம் அது. பிருகதீஸ்வரன் சாரும் முத்திருளப்பன் ஐயாவும் எப்படியோ பழைய வாடகை பாக்கியைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்து வாசகசாலையைக் காலிபண்ணிப் பொஸ்தகங்களையும், பண்டம் பாடிகளையும் ஆசிரமத்துக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்க. போறபோது மதுரத்தையும் ஆசிரமத்துக்கு வந்து டச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க, அது கேக்கலே. வாசக சாலை விஷயமாப் பேசினதிலே எனக்கும் வீட்டுக்காரனுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே கில்ட் கடையையும் அங்கேருந்து காலி பண்ணிட்டு நான் இங்கே வந்திட்டேன். இங்கே வந்தப்புறம் ஒரு நாள் மதுரத்துக்கு உடம்பு செளகரியமில்லேன்னு ஒண்ணாம் நம்பர்ச் சந்திலேருந்து ஆள் வந்திச்சு. போய்ப் பார்த்தேன். அது படுத்த படுக்கையா, இளைச்சுப் போய் உடம்புக்குச் சுகமில்லாமே இருந்திச்சு. உடனே நான் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். ஆசிரமத்திலேருந்து எல்லாரும் வந்தாங்க. அங்கேயே வந்து டச் சொல்லி மதுரத்தை மறுபடியும் எவ்வளவோ கெஞ்சினாங்க. அப்பவும் அது கேட்கலே, வைத்தியரை வரவழைச்சு இங்கேயே பார்த்தாங்க. 'டி.பி. அட்டாக்"னு தெரிஞ்சது. பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்குத் தந்தி அடிச்சு அவர் மனைவியை வரவழைத்தார். அந்தம்மா வந்து மதுரத்தைக் கூடவேயிருந்து பெத்த தாய் மாதிரிக் கவனிச்சிக்கிட்டாங்க. இதுக்குள்ளே கடன்காரன் மதுரத்தின் வீட்டுக்கு ஜப்தி வாரண்ட் கொண்டு வந்துட்டான். வீட்டை மீட்டுக் கடனைக் கொடுத்திடணும்னு பிருகதீஸ்வரன் சார் ஆனமட்டும் என்னென்னமோ பண்ணிப் பாத்தாரு, முடியலே. வீடு ஜப்தியாகிக் கடன்காரனிட்டப் போயிடிச்சு, மதுரம் சங்கீத விநாயகர் சந்திலே ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியதாச்சு. அந்தச் சமயத்திலே நாகமங்கலம் ஜமீன்தாரிணிக்குத் தகவல் எப்பிடியோ எட்டி, அவங்க வந்து பார்த்தாங்க. மதுரத்தை ரொம்பக் கோவிச்சுக்கிட்டு, உடனே நாகமங்கலத்துக்கு வரணும்னாங்க. அதுக்கு மதுரம் சம்மதிக்கலே. ஒரே பிடிவாதமாக இங்கியே