பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஆத்மாவின் ராகங்கள் வேலைகள் தடைப்படும். நான் இன்னிக்கே புறப்படறேன்' என்று போகும்போது அவனிடம் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனார் அவர். அவனும் அதற்கு இணங்கினான். -

அங்கே ஜமீன்தார் இருந்த காலத்தில் சேகரித்த பல ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய பெரிய லைப்ரரி ஒன்றிருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும், சமஸ்கிருதத் திலுமாக ஏராளமான புத்தகங்கள் அங்கே இருந்தன. அதிர்ஷ்டவசமாக ராஜாராமன் அந்த நான்கு மொழிகளிலும் பயிற்சி உள்ளவனாக இருந்ததால் நிறையப் படிக்க முடிந்தது. சில கதைப் புத்தகங்களை மதுரத்துக்கும் படித்துச் சொன்னான் அவன். பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுணுக்கம் பற்றிய புத்தகங்களையும், எண்ணிக்கையில் அதிகமாகயிருந்த அரசியல் புத்தகங்களையும் அவன் ஆழ்ந்து கருத்தூன்றிப் படித்தான். ஒரு வாரம் கழித்து, ஒர் ஆள் வசம் அவன் உபயோகத்துக்காக, ஆசிரமத்திலேயே நெய்த கதர் வேஷ்டிகளும், துண்டுகளும், குருசாமி தைத்து அனுப்பிய சட்டைகளும் கொடுத்து விட்டிருந்தார், பிருகதீஸ்வரன். அவற்றை வாங்கிக் கொண்டு தான் முடிந்தவரை அங்கு நூற்றிருந்த நூல் சிட்டங்களைக் கொடுத்தனுப்பினான் ராஜாராமன். படித்த நேரம் தவிர மற்ற ஒய்வு நேரங்களில் விட்டுப் போய் இருந்த நாட்களுக்கு எல்லாம் சேர்த்து டைரி எழுதவும் முடிந்தது. -

ஒரு நாள் மாலை மதுரத்தோடு அவன் பேசிக் கொண்டிருந்தபோது அவள் அவனிடம் ஒரு விநோதமான வேண்டுகோள் விடுத்தாள். -

'நீங்க இந்தத் தாடி மீசையை எடுத்துடுங்களேன். இன்னமும் எதுக்குத் தாடி மீசை? அதான் ஜெயில்லேருந்து வந்தாச்சே, இன்னமும் பார்க்கறதுக்குச் சாமியார் மாதிரி இருக்கணுமா, என்ன?’ -