பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


பின்னும் ஆக மகிழமரம் முதல் ஒற்றீசர் சந்நிதிவரை போய் வருவது வழக்கம்

படம்புக்ககாதர்

திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்தருளாநின்றவர் படம்பக்கநாதர் என்று கல்லெழுத்தில் உள்ளது. ஆனால் இப்பொழுது திருமகிழுக்கு வருபவர் ரிஷபாரூடர் என அறிய வருகிறது. “ஒற்றியூரில் உபமன்னிய முனிவரிடம் சிவதீக்கை பெற்றுப் பூசித்த வாசுகியைத் தமது திருவுருவில் சேர்த்து அமர்த்திக்கொண்டு அந்த அடையாளங்களைப் இன்றும் விளங்க வீற்றிருத்தலின் சுவாமிக்குப் படம்பக்கநாதர்” என்று பெயர் வந்தது. 'சுவாமி சந்நிதிக்கத், தெற்கில் தனி மண்டபத்தில் மாணிக்கத்தியாகர் எனப்படும் உற்சவமூர்த்தி சோமாஸ்கந்தராக எழுந்தருளியுள்ளார். இம்மண்டபத்துக்குப் பின்னர் ஒரு சிறு தனிக் கோயில் உள்ளது. அதனைக் கெளடீஸ்வரர் எ ன் று சொல்லு கின்றனர். ஆனல் அதனைப் பார்த்தால் சிவமூர்த்தங்கள் இருபத்தைந்துள் ஒன்ருயிருக்கக்கூடும் என்று கருதலாம். 4 கரங்களுண்டு; யோகாசனத்தில் அமர்ந்த கோலம்; வலது கரம் மேல் நோக்கி யிருக்கிறது; அதில் சூலம் போன்று ஒன்றிருக்கிறது” 3 இக் கெளடீசுவரர் கோயிலே படம்பக்க நாதர் ஆலயம் என்றும் 38 அது வீரராசேந்திர சோழனது ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி.1068ல்) அதிகாரி ரா சந்திர மூவேந்த வேளான் என்பவரால் கற்றளியாக்கப்பெற்றது. ப என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். மேற் குறித்தவாறு

36. இப்பகுதியில் கண்ட பல நடைமுறைக் (, பிப் 1.1. களேத் திரு. க. சோமசுந்தரம செட்டியார் அவர்கள் . அப் புடன் உதவினர்கள்.

37. இக் குறிப்புக்களேயும் திரு. க.சோமசுந்தரம் செட்யார் அவர்கள் உதவிஞர்கள்.

38. ARE II Para 6 and 22 of the year 1913. 39. ,ெ 232 of 1912.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/161&oldid=1388428" இலிருந்து மீள்விக்கப்பட்டது