பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


அசாதரண வேகத்தில் சுழன்று செல்லும் விண்மீன்களும், நகர்ந்து செல்லும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு, இக்கால தொடர்நிகழ்ச்சியில் பல்வேறு விதமான பெளதிக வேறுபாடுகளை உருவாக்கி விடுகின்றன.

எனவே, உலக நீர்நிலையின் மேற்பரப்பில் காணப்படும் இத்தனை வேறுபாடுகளும் உலக அடிப்படை அமைதியில் ஒன்று கலந்து விடுகின்றன.

ஆகர்ஷண விசை-மின்காந்த விசை, பொருள்-சக்தி, மின்சக்தி-மின்சார பிரதேசம், பரந்தவெளி-காலம், இந்த இரட்டைகளின் வேற்றுமைகள் எல்லாம் ஐக்கிய வெளித்தத்துவம் வெளியிடும் சம்பந்தங்களில் மங்கி, ஒளிகுன்றி ஒன்றாகிக் காலவெளித் தொடர் நிகழ்ச்சி என்ற ஒரே சம்பவத்தில் இரண்டறக் கலந்து விடு கின்றன. காலவெளித் தொடர் நிகழ்ச்சி என்பதுதான் இந்த உலகமாகும்.

அமைதியான நீர்நிலையில் மீன் முதலான பிராணிகளால் மேற்பரப்பில் உண்டாக்கப்படும் வெவ்வேறு வகையான அலை உருவங்களே அந்த நீர்நிலை என்று எவரும் கூறுவதில்லை. நீர்நிலை அமைதியானதே - ஆனால், அதன் மேற்பரப்பில் ஏற்படும் வெவ்வேறு அலை உருவங்களே. அந்த நீர்நிலைக்குள்ளிருக்கும் பிராணிகளால் தற்காலிகமாக ஏற்படும் பல்வேறு நிலைகள்.

காலம், பரந்தவெளி, பொருள், சக்தி, மின்காந்தம், ஆகர்ஷணம் ஆகியவை உலகப்பொருள்களின் வெவ்வேறு வகை இயக்கங்களால் ஏற்படும் பல்வேறு தற்காலிக நிலைகளே. இவற்றைத் தனித்தனியே உணர்வதால் மாத்திரம் உலக இயக்கத்தின் உண்மையை உணர்ந்து விட முடியாது.