பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

ஆழ்வார்களின் ஆரா அமுது


குறிப்பு. ஆகையால், முற்பட வணங்கிப் பின்னைத் தேக யாத்திரை பண்ணப் பாருங்கோள்' என்பர் பெரியவாச்சான் பிள்ளை, இந்த ஆழ்வாருக்குப் பக்தியும் பக்தர்களும் பகவானும் தாம் பகல் நினைவும் இராக்கனவுமாக அமைந்துள்ளன. பகல் கண்டேன்; நாரணனைக் கண்டேன்’ (81), கண்டேன் திருமேனி யான் கனவில்; ஆங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடர் ஆழி (67) என்பன போன்ற பாசுரங்கள் இதனைக் காட்டுகின்றன. ஆ ழ கி ய மலர்களால் எம்பெருமான் திருவடிகளை அலங்கரிக்க வேண்டும் என்று உபதேசிக்கும் இந்த ஆழ்வார் தம் நெஞ்சையே கோயிலாக இழைத்துப் பக்தியையே நன்மலராகக் கொண்டு வழிபடுகின்றார். பொய்கையாரின் பக்தியநுபவத்திற்கும் பூதத்தாரின் பக்தியநுபவத்திற்கும் அடிப்படையில் அதிக மான வேற்றுமை இல்லை. பொய்கையாரின் பக்தியநுபவம் 'பரபக்தி' - அதாவது எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்கின்ற ஆவல். இதனை, அன்புஆழி யானை அணுகு என்னும், நா.அவன்தன் பண்பு ஆதித் தோள்பரவி ஏத்துஎன்னும் - முன்பூழி கானானைக் காண் என்னும் கண், செவி கேள்என்னும் பூணாரம் பூண்டான் புகழ்." (அன்பு . பக்தி; ஆழி யான் - திருமால், அணுகு - கிட்டி அநுபவி; பரவி - பேசி, ஏத்து . துதி) என்ற பாசுரத்தில் காணலாம். பூதத்தாழ்வாரின் பக்தி யநுபவம் பரஞானம்; அஃதாவது, எம்பெருமானை நேரில் காணல். இதனை, 83. முதல். திருவந், 72