பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஆழ்வார்களின் ஆரா அமுது


அமைந்திருப்பதைக் கண்டார்; களி கூர்ந்தார். அவற்றை அப்படியே ஆலிலைப் பள்ளியான சந்நிதியில் சேர்ப் பித்தார். அன்றைய சேவையில் பெருமாளின் கண்களிலும் முகத்திலும் கண்ட தேசு கனவில் அவர் முகத்தில் கண்டதைப் போன்றே இருப்பதாக அவர் மனத்திற்குப் பட்டது! அருகில் இருந்த கோதையை நோக்கி ஆனந்தக் கண்ணிர் பொழிந்து, "எம்பெருமானுக்குச் சூடிக் கொடுத்து, என்னை ஆண்டாள் இவளே!' என்று சொல்லி ஆனந்தக்கடலில் ஆழ்ந்தார். அன்று முதல் குடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்" என்ற திருநாமங்கள் அச் செல்விக்கு வழங்கி வரலாயின. அருளிச் செயல்கள் : சூடிக் கொடுத்த நாச்சியார் தனது பருவம் வளரும் தோறும் ஞான பக்திகளும் உடன் வளர்ந்து வரலாயின. தான் கணவனாக வரித்த கடல் வண்ணன் விஷயமாக வேட்கை விஞ்சி நின்றது. அந்தக் காதலனைத் தப்பிப் போகவும் முடியாது, மறக்கவும் முடியாது என்பது தெளிவாகி விட்டது. சில சமயங்களில் அந்த அழகுத் தெய்வம் இவளுடைய அகக்கண்ணுக்கு இலக்காகிச் சேவை காதிக்கவில்லை. கால வெள்ளத்தைப் பின்னோக்கிக் கடந்து சென்று அந்த அவதார காலத்தை எப்படி அடைவது? இஃது இயலாத காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் விளையாடின யமுனை நதிக்கரை, பிருந்தாவனம், நந்தகோபன் வாழ்ந்த இடம் இன்றளவும் உண்டு. அவற்றையாவது கண் குளிரக் கொண்டு ஆறுதல் அடைய நினைத்தாள். அங்குச் செல்வ தற்கும் வாய்ப்பும் வசதியும் இல்லை. இந்நிலையில் பாவனா சக்தி துணை செய்தது. சீரீ வில்லிபுத்துர் ஆயர் பாடி யாகியது: அங்குள்ள பெண்கள் கோபியர் கன்னிக ளாயினர்; ஆலிலைப் பள்ளியான் திருக்கோயில் நந்த கோபர் மாளிகையாகி விட்டது; வடபெருங் கோயிலுடை போன் கண்ணனாகக் காட்சி தந்தான். இப்போது பிறந்தது திருப்பாவை என்னும் இன்பமயமான இசைத்