பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல்

9

போகுமானால், அரசாங்கம் அடுத்தபடியாக எவ்வித ஒளிவும் மறைவுமின்றி இந்துக்களைக் கிறிஸ்தவராக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டே தீரும். இங்கிலாந்து அரசியார் மத மாற்றத்தில் தமக்கு நாட்டமில்லை என்றும், நடுவு நிலையோடு அரசாங்கம் நடந்துகொள்ளும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் என்பது உண்மையே ஆனால், நடைமுறையில் பார்க்கும்போது மத மாற்றத்தில் ஈடுபடுவதில் மிகுந்த பற்றுள்ளத்தோடு அரசியலார் செயற்பட்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாய் விளங்குகிறது. அரசாங்கத்தின் முறையற்ற ஆணைகளை நீதிபதிகளே எதிர்த்துள்ளார்கள். ஆனால் அத்தகைய எதிர்ப்புகளை அரசாங்கம் எதிர்பார்த்தே முறை கெட்ட ஆனைகளைப் பிறப்பித்துள்ளது. நீதிக்குப் பழுதுாட்டும் வகையில் பிறப்பிக்கப்படும் எல்லா ஆனைகளையும் எதிர்த்து நீதி மன்றத்தின் நடுவு நிலையைக் காப்பாற்றுவேன் என்று பன்முறையும் முழங்கிய ஒரு நீதிபதியை வீட்டுக்கு அனுப்பியே திருவது என்ற முடிவின் விளைவே அரசாங்கத்தின் இந்த முறைகேடான ஆனைகள்.' இவ்வாறு அரசாங்கத்தின் வெளிப்படையான பலம் பொருந்திய ஆதரவைப் பெற்றுப் பாதிரிமார்கள் செய்து வந்த அதேச் செயல்களைக் கண்டு, இந்து சமுதாயமே ஆத்திரமடைந்தது' லட்சுமி நரசிம்முலு செட்டியார் மக்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் கருவியாய் விளங்கித் தம்மால் இயன்ற அரும்பணிகளை எல்லாம் ஆற்றத் துணிந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டிவ் சர்குலேட்டர்' என்ற ஒரு செய்தித்தாள் நாராயணசாமி நாயுடு என்பவரால் நடத்தப்பெற்று வந்தது. அந்தச்