பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 57 செட்டியார் சிறிது தயங்கி கின்ருர். நான், சிறு துாறல் நல்லதுதான் ; குற்றமில்லே புறப்படலாம்,' என்று சொல்லவே புறப்பட்டோம். செல்லுகையில் பங்களாவின் புறவாயிலிலிருந்து ஒரு மனிதன் தன்கையில் வஸ்திரத்தால் மூடிய ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தை எ டு த் து க் கொண்டு பங்களாவை நோக்கி வந்தான். நாங்கள் நெருங்க நெருங்க, அவன் அதன் மேலே இருந்த வஸ்திரத்தை எடுத்துவிட்டான். அந்தத் தாம் பாளத்தில் கிச்சிலி முதலிய பழங்க ள் இருந் தன. அவற்றின் மேல் என்பார்வை விழுந்ததோ இல்லையோ எனக்குப் பு ள க | ங் கி த ம் உண் டாயிற்று. அதே சமயத்தில் பின்னே கின்று எங் களேக் கவனித்த கோபாலசுவாமி முதலியார், நல்ல சகுனமாகிறது உத்தேசித்த காரியம் நன்ருக நிறைவேறும் பழம் வருகிறது. உங்கள் முயற்சி பலனைப்பெறும். கவலையின்றிப் போய் வாருங்கள், என்று சொல்லிவிட்டு அந்த மனிதனேப் பார்த்து, அடே, அதில் இரண்டு பழங்கள் அவர்களிடம் கொடு, என்று உத்தரவு செய்தார். கையில் பழங் கிடைத்தபோது நான் என்னேயே மறந்தேன். கட வுள் திருவருள் என்று எண்ணிச் சென்ருேம். ఖీ 影 激砲 ' இப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த சேலம் இராமசுவாமி முதலியார் திரும்பி வந்தார், சிந்தாமணியில் பதிப்பித்திருந்த பகுதிகளேக் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லேயில்லே. அவர் என்னே அழைத்துச் சென்று சில கனவான்களு டைய பழக்கத்தைச் செய்வித்தார். 嶺 袭 鷲