பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



திருப்பதி திருமலையிலுள்ள தெய்வத் திருமேனியின் ஒரு பாதி சிவன் என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. கருடப் பதுமைகள் இல்லாமல் சிம்மப்பதுமைகள் இருப்பதும் ஆய்வுக்கு உரியது. மற்றும் 'பாலாஜி' என்னும் பெயரும் எண்ணத் தக்கது. "ஜி" போடுவது வடநாட்டார் வழக்கம். ராஜ கோபாலாச்சாரியாரை ராஜாஜி: என்று கூறுவதுபோல் பாலசுப்பிரமணியரைப் பாலாஜி" என்று குறிப்பிடுவதாகச் சிலர் கூறுகின்றனர்; மகாராட்டிரத்தில் 'பாலாஜி விசுவநாத்' என்னும் பெயருடைய அமைச்சர் ஒருவர் இருந்ததாக வரலாறு கூறுகிறது. 'விசுவநாத்' என்பது சைவப்பெயர். எனவே, அதனோடு 'பாலாஜி விசுவநாத்" என இணைந்த 'பாலாஜி' என்பதும் சைவப் பெயராக இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், பாலாஜி என்னும் பெயர் பற்றித் திட்டவட்டமான முடிவு எதுவும் யான் கூறுவதற்கில்லை. அறிஞர்களின் எண்ணத்தைக் கிளற இதனை இங்கே நினைவு செய்துள்ளேன்.

இம்கே சுப்புராயர் என்னும் பெயரையும் குறிப்பிட வேண்டியுள்ளது. "சுக்குக்கு மிஞ்சின மருந்து இல்லை; கப்புராயருக்கு மிஞ்சின. தெய்வம் இல்லை" என்பது ஒரு சார் பழமொழி. மயிலத்தில் முருகன் கோயில் உள்ளது. முருகன் பெயராக "மயிலம் சுப்புராயர்" என்பது சொல்லப்படுகிறது. இதனை 'வேங்கட சுப்பையா' என்னும் பெயரோடு ஒத்திட்டு நோக்கலாமா? பால சுப்பையா என்னும் பெயரும் தமிழ்நாட்டில் உண்டு. இதனைப் 'பாலாஜி' என்னும் பெயரோடு ஒத்திட்டு நோக்கலாமா? அறிஞர்கள் ஆய்க..

ஆச்சாரியார் அருளுரை :

மற்றும். இங்கே, காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் கூறியனவாகத் தெரிவிக்கப்படும் சில கருத்துகள் குறிப்-