பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பட அதிபர் 'ஆதி மந்தி - ஆட்டன் அத்தி கதையைப் படமாக்குகிற எண்ணத்தில் அப்பாவை அழைத்து, 'டிஸ்கவுன் வைத்திருந்தார். அங்கே போய்ப் பத்து நிமிடங்கள் போல் உட்கார்ந்திருந்து விட்டு - - 'உங்களையெல்லாம் புத்திசாலியாக்க என்னால் முடியாது. வருகிறேன்” என்று சொல்லிப் பெரிதாய் ஒரு கும்பிடு போட்டு விட்டு வந்தவர் அப்பா. எழுத்தாளர்கள் பலரையும் பற்றுகிற நோய் அப்பாவையும் பிடித்தது; பத்திரிகை தொடங்குகிற ஆசைதான். 'மனிதன் என்ற மகுடத்தோடு நாலணா விலையில் (இருபத்தைந்து பைசா) மாத இதழ் ஒன்றை நடத்தினார். மூச்சைப் பிடித்துக் கொண்டு பதின்மூன்று இதழ்களைத்தான் அவரால் வெளியிட முடிந்தது. 'மனிதன் முதல் இதழ் வெளியானது ஒரு சுதந்தர தினத்தில். முதல் இதழை என்னை மனிதனாக்கிய மனிதன், ஆசிரியர் 'கல்கி அவர்களுக்கு அன்புடன் விந்தன், 15.8.54' என்று தன் கையெழுத்திலேயே பதிவு செய்து, பேராசிரியர் கல்கியின் படத்தையும் போட்டு 'சமர்ப்பணம் எழுதினார். அப்பாவின் முன்னோர்கள் மிகவும் வசதியாக வாழ்ந்து நொடித்துப் போனவர்கள். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் பெரிய பண்ணையார் என்கிற சிறப்போடு ஊரையே ஆண்டவர் - தாய்வழித் தாத்தா முருகேச நாயக்கர். ஜமீன்தார் என்றே சொல்வார்கள். பால் வியாபாரம். சிலம்பப் பயிற்சியைப் பொழுது போக்காக வைத்திருந்தவர் அவர். குடும்பம் நொடித்துப் போய் சென்னைக்கு இடம் பெயர்ந்த போது அப்பாவுக்கு ஒன்பது வயது. பள்ளிப்படிப்பு முழுவதுமாகத் தடைப்பட்டது. தண்டையார்ப்பேட்டையில் குடியேறினார்கள். ஜட்கா வண்டியில் வைத்துப் பால் வியாபாரம் செய்தார் தாத்தா. கூட்டுக் குடும்பமாக விளங்கியது அது. கொஞ்ச நாள்களில், எங்கள் தாத்தா - அப்பாவின் அப்பா சூளை, பட்டாளத்தில் சொந்தத்தில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு தனியே வந்துவிட்டார். அந்த வீடு இன்றைக்கும் இடிபாடுகளாய் அப்படியே இருக்கிறது. தாத்தா எப்போதோ வாங்கிய வெறும் ஐநூறு ரூபாய்க் கடன், அந்த வீட்டை விழுங்கி விட்டது. முகவரி கூட நினைவிருக்கிறது, 'நெ 1, வீராசாமித் தெரு’ என்பதாக! 8 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005