பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிளிர்ந்து குலுங்கியது. காற்றில் எழுப்புவதும் பிறகு தாழ்வதுமாக கிளைகள் செயல்பட பூக்களும் அவ்விதமே செய்தன. கேசவன் அந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'நீ ஏதாவது பேசியிருக்கலாம்ல... சார்கிட்ட?” “என்ன சொல்றே நீ? அவரு சடசடன்னு திட்றாரு... நான் பதில் சொன்னா விட்டுடவா போறாரு?" - 'எவ்ளோ பேசறே... தலை குனிஞ்சிட்டு!” "ஆமாண்டா எனக்கு அப்படிதான் வருது.” 'மாத்திக்கயேன்.' 'முடியலை.” 'ஏன் முடியாது?’’ 'சொல்லிட்டுப் போறானுவன்னு வாழ ஆரம்பிச்சுட்டேன்டா இராஜகோபால்!” - 'நான் உன் பிரெண்டுதானே! எங்கிட்டயாத்சும்தலை நிமிர்த்திப் பேசலாம்ல சவுகரியமா...' 'நீ சைக்கிளைப் பார்த்து ஒட்டு இராஜகோபால்!” 'பேச்சை மாத்றான் பார்... பேச்சை' - எதிரே லாரி ஒன்றும் மொபெட் ஒன்றும் கடந்து போயின. சிட்டி லிமிட் முடிந்து வடக்குத் தெருவுக்குள் அவர்களது சைக்கிள்கள் இரண்டும் வளைந்தன. - 'அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் நாம இரண்டு பேருமே வேலை தேடிகிட்டுப் பிரிஞ்சு போயிடுவோம்... நீ எந்த ஊர்ல இருப்பியோ என்னமோ? கேக்கணும்னு தோணிச்சு கேட்டேன்’ என்ற இராஜகோபாலை - - “என்ன கேட்டுட்டே புதுசா?’ என்று மறித்தான் கேசவன். சிறிது நேரத்திற்குள் தன் ஊனத்தைப் பற்றி பேசுகிறான் என்பது புரிந்தது. குடைந்து குடைந்து பேசும் இராஜகோப்ாலை வேறு கேள்வி கேட்டாலன்றித் தப்ப முடியாது என்பது புரிந்து விட்டது. 'இப்போ நான் உன் வீட்டுக்கு வரலாமா? ரொம்ப நாளாச்சு...” 20 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005