பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி சிந்தனை: பேதை உரையும் மேதையர் பேச்சும் கவிக்கோ ஞானச்செல்வன் தலைநகர் சென்னையில் பல இலக்கிய விழாக்களில், தமிழ் அரங்குகளில் சில திங்கள் காலமாகப் பேசப்பட்டு வருவன இரண்டு செய்திகள். முதலாவது, நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழி என்று ஏற்புரைத்து அறிவித்தமை பற்றியது. இது பற்றிப் பேசும் பலரும் 'தமிழ்மொழி செம்மொழி ஆகிவிட்டது” என்றும், தமிழ்மொழி செம்மொழி ஆகியுள்ள தருணத்தில்... என்றும் பேசி வருகிறார்கள். - தமிழ் இன்றைக்குச் செம்மொழி ஆகவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் செம்மொழியாக இயங்கி வருகிறது. இந்தச் செம்மொழி என்பதைச் சிலர் செவ்வியல் மொழி என்றும் உரைத்தனர். சரியாகச் சொன்னால் பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்ட உயர்தனிச் செம்மொழி என்பதே நாம் கருதும் பொருளை முழுமையாகத் தரவல்ல்தாகும். 'கிளாசிக் கல் லாங்வேஜ்' என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டதையே, உயர்தனிச் செம்மொழி என்று பரிதிமாற் கலைஞர் சுட்டியுரைத்தார். -- தமிழ்மொழி உயர்மொழி, தமிழ்மொழி தனிமொழி, தமிழ்மொழி செம்மொழி என்று மூன்று கூறுகளாக இத்தொடரின் நுணுக்கத்தை நாம் பகுத்தறிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றிலேயே, இப்போது செம்மொழி என்பதற்குச் சொல்லப்படும் பதினோரு தகுதிகளும் அடக்கம். அந்தப் பதினோரு தகுதிகளைப் பற்றி ஏற்றும், மறுத்தும், குறைத்தும் பேசுவோரும் எழுதுவோரும் உளர். ஈண்டு நாம் அது பற்றி ஆராயப் போவதில்லை. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 37