பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டித்தார். பல மொழிகள் தெரிந்த பாரதியின் ஆதங்கம் ஒருபுறமிருக்க வ.உ.சி.யின் ஆதங்கம் இன்னொருபுறம். பாரதியின் கவலை என்னவெனில் ஜ, ஷ, ஸ, ஹ,r போன்ற எழுத்துகளைத் தமிழ் அரிச்சுவடியில் சேர்த்திருப்பதுபோல நாமும் நம் காலத்திற்குத் தேவையான சொற்களைச் சேர்க்கலாம் என்பது தான். அதன்மூலம் தமிழ் வலுவிழந்த மொழியென்று அவர் பேசவில்லை. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றுதான் எழுதியிருக்கிறார். வ.வே.சு. ஐயருக்கும் பாரதியின் கருத்தில் உடன்பாடு. "எஃப் என்ற எழுத்தை ஆங்கிலேயரைப் போல உச்சரிக்க ஆசைப்படுவதே ஒருவிதப் போலித்தனம்தான். தமிழில் உள்ள எழுத்துகளைக் கொண்டே அவற்றை எழுதவோ, பேசவோ செய்தால் அது நகைப்புக்குரியதில்லை. எஃப்ஐ எப் என்றால் என்ன குறைந்துவிடும்? பாரதியின் மொழிப்பற்றும், வ.உ.சி.யின் மொழிப்பற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாதவை. எனவே, இருவரது கருத்துகளும் ஏக்கங்களும் கவனித்துக்குரியன. இந்த விவாதத்தின் முடிவாக 1936இல் இராஜாஜி எழுதினார். "வடமொழிச் சொற்களை தமிழில் சொல்லும்போது அவற் றின் சம்ஸ்கிருத உச்சரிப்பை வைத்துச் சொல்ல வேண்டும் என்பது கூடாது. அது தமிழ் முறையாகாது. மணிப் பிரவாளமாகும்'. எனவேதான் பிறமொழிகளின் சொற்களுக்குத் தமிழ்மொழியில் சொற்களைத் தேடுவதை விட்டுவிட்டு உரிய முறையில் எழுதிப் பழுகுதல் வேண்டும். - சில வார இதழ்களின் கேடுகெட்ட வாக்கிய அமைப்புகளைப் பார்த்து, படித்து, தமிழ் மறந்த புதிய தலைமுறைக்கு தமிழில் எழுத்துக் குறை என்ற விவாதம் இனிக்கும். உண்மையில், தனது தாயைப் பழிப்பது போன்ற இழிசெயல்' என்பார் பாரதிதாசன். தமிழிலுள்ள இந்தச் சிக்கலான விவாதத்தை இவருக்கு முன்பாக ஆ. வேங்கடாசலபதியும் எழுதியிருப்பதாகத் தகவல். மேலும் அறியவிரும்புவோர் வ.உ.சி. வளர்த்த தமிழ்’ என்ற நூலை வாசிக்கவும். எழுதியவர் மா.ரா. அரசு. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர். நமக்கு என்ன செரிக்குமோ அதைத்தான் உண்ணவேண்டும். ஆசைக்கு உண்டு, அவஸ்தைப்படுவதில் புதுமை எதுவுமில்லை. - - * O. 54 e இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005