பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூலரின் மந்திர பூர்வமான தமிழ் நயத்தை மேதை நந்தி அடிகள் எளிய நடையில் விளக்கி அளித்துள்ளார். புலவர் ஞானச் செல்வன் கட்டுரை பாரதி சிந்தனைக்கு உற்ற விருந்து. அப்பர் பெருமானின் பாடலில் புதைந்துள்ளவரலாற்று-இலக்கியச்சிறப்பை-டாக்டர் இராகலைக்கோவன் விளக்கிப் பயனுள்ள கட்டுரையாக வடித்துள்ளார். புத்துலகச் சிற்பி யுகபாரதியின் கட்டுரை ஒவ்வோர் இதழிலும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. - ரப்பரைத் தூய தமிழில் அழிப்பான் என்று தூய தமிழ் இலக்கியவாதிகள் கூறுவார்கள். ஆனால் பொருளாதாரத்தை உயர்த்தும் அந்த ரப்பரின் பயன், உருவாகும் விதம், உப-பொருள்கள் இவற்றை அறிவியல் மேதை எம். தோத்தாத்ரி எளிய நடையில் நமக்கு அளித்திருக்கிறார்கள். தவத்திரு கர்மயோகி எழுதியுள்ள மனிதன் தேடுவது கட்டுரை வாழ்க்கை வளம்பெற உதவுகிறது. - 'இவர், இப்போது என்ன செய்கிறார் பகுதியும், புகழ்பெற்ற அறிவாளிகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய உதவுகிறது. "வானம் அளப்போம்', 'வானநூற் பயிற்சி கொள் என்றார் மகாகவி. வான மண்டலத்தில் நிகழும் மாறுதலை எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை நாம் அறியச் செய்கிறார். கவிஞர்களிடம் கேள்விகள் கேட்டுப் பயனுள்ள உளம் திறந்த விடைகளைப் பெற்று வரும் கவிஞர் ஜானகிராமன், இந்தச் சுவடியில் கவிஞர் நா. காமராசனைச் சந்தித்து அவருடைய நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று ஒளிவுமறைவு இல்லாத பதிலைப் பெற்றுள்ளார். 'இலக்கியப்பீடம் சிறுதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தவிர, பாராட்டுப் பெறும் சில கதைகளை வெளியிட முடிவு செய்து, ஒவ்வொரு கதையாக வெளியிட்டு வருகிறோம். சென்ற சுவடியில் திரு.என். சொக்கன் எழுதிய சிறுகதையும், இந்தச் சுவடியில் ச. கலியாணராமன் எழுதிய சிறுகதையும் உறுதியாக வாசகர்கள் பாராட்டுதலைப் பெறும். அமரர்ரங்கநாயகி அம்மாள்நாவல் போட்டியில் பரிசு பெற்ற திரு.பா. சத்திய மோகன் எழுதிய 'காக்கைச் சிறகினிலே. தொடரைப் படிப்பவர்கள் பாராட்டுகிறார்கள். 'கச்சிமூதூர் கருணை வள்ளலை நேரே கண்டு ஆசிபெற்ற உணர்வை அடைகிறோம் என்று ஒவ்வொரு சுவடியிலும் படிப்பவர்கள் பாராட்டுகிறார்கள். எழுத்தாளர் சத்யகாமனின் தொண்டு மறக்க முடியாதது. இந்தச் சுவடியில் வெளிவந்துள்ள கவிஞர்கள் முத்து. எத்திராசன், கா. சங் கரன், கவிஞர் சுடர், இளஞ்சுடர் கவிதைகள் பீடத்தின் பெருமையை உயர்த்துகின்றன. கலைமாமணி விக்கிரமன் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 3