பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லை, எங்களையும் சேர்த்துத்தான் திருத்தியிருக்கே’’ என்றார் இராமலிங்கம். அவன் உட்கார்ந்தான். 'ஏன் உன் மூஞ்சி இம்மாங் கலவரப்பட்டுப் போயிருக்கு? வந்த சேதியைச் சொல்லு. எதுவாயிருந்தாலும் செய்யறேன்.” அந்த ஆறுதல் சொற்கள் அவன் கூச்சத்தைப் போக்கின. “எல்லாம் பசியும் பட்டினியுமாக் கிடக்கிறாங்க. வறட்சி நிவாரணம் வரும்னு சொல்லிக் காலத்தைக் கடத்திக்கிட்டு இருக்கிறாங்க' என்றான் அவன். 'தெரியும் சொல்லு. நம்ம அவசரம் அவங்களுக்குத் தெரியாது. சட்டதிட்டம் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. சாலையிலே அடிபட்டு ஆசுபத்திரிக்குப் போனா, போலீசுக்குச் சொல்லியாச்சான்னா கேட்பாங்க பாரு டாக்ட்ருங்க? அதைப் போலத்தான். உயிரைக் காப்பாத்த சட்டதிட்டங்களைத் தூக்கிக் குப்பையிலே போடணும். உங்க தெருவுக்கு என்ன செய்யலாம் முதல்லேன்னு நானும் யோசிச்சுக்கிட்டுதான் இருந்தேன். ஒரு மூட்டை அரிசி அனுப்பட்டுமா?’ என்றார். 'இலவசமாகொடுக்கறதை எங்க மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஒரு பத்து நாளைக்காவது சோறு போட்டாகணும்.' . "ஐயோ! அது எப்படிப்பா முடியும்? என்கிட்டே வேலையும் இல்லை. ஊராட்சி மன்றங்களும் பணம் இல்லாமே முடங்கிக் கிடக்கு தெரியுமா? பொது வேலை ஒண்ணுகூட நடக்கலை.” 'எனக்கும்தாங்க ஒண்னும் புரியலை. எங்க மக்களுக்கு அளவுக்கு மேலே தன்மான உணர்ச்சியை நானே உண்டாக்கி விட்டு இப்போ நெருக்கடியிலே தவிக்கிறேன். அவனவனும் சட்டம் பேசுறானுங்களே தவிர, கடமை உணர்ச்சியை அடியோட ஒழிச்சுட்டாங்க்." 'தன்ம்ானம் என்கிறது கடமைக்கு எதிரானது இல்லை. கடமைக்குள்ளேதான் தன்மானம் அடங்கியிருக்கு, கடமைக் காகத்தான் தன்மானமே. இப்போ நீ உன் கடமைக்காகத்தான் தன் 82 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2Oం5