பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

177


 வதால், உளவியல் என்பது விழித்திருக்கும் போதும், உறங்கும்போதும் உண்டாகிற மனத் தொடர்பான விஷயங்களைப் பற்றி விளக்குவதாகும் என்று விவரிக்கப்பட்டது.இதை ஃப்ராய்டு (Freud) என்பவர் கூறியிருந்தார்.

நடத்தை இயல்

நவீன காலத்தில் விளக்கம் தர முனைந்தவர்களில் முதன்மையானவர் வாட்சன் (Watson) என்பவர்.

உளவியல் என்பது நடத்தையைப் பற்றி (Behaviour) விளக்கம் தரும் இயல் என்றார். அவரின் கருத்துப்படி தனிப்பட்ட ஒருவரின் நடத்தையைப் பற்றி சோதனை செய்ய முடியும். விளக்கம் பெற முடியும்.நடத்தை என்பது வெளிப்புறச் செயல்களே (Obejective) ஆகவே உளவியலை நடத்தை பற்றி அறியும் இயல் எனும் கருத்தை மாற்றி, நடத்தை பற்றி மிகுதியாக விளக்கும் இயல் என்பதாக ஏற்றுக் கொண்டனர்.

விவரமான விளக்கம்

இதற்கு மேலே, ஒரு படி சென்று, உட்ஒர்த் (wosd worth) என்பவர், புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது “உளவியல் என்பது தனிப்பட்ட ஒருவரின் நடத்தைப்பற்றியும், அவருக்குள்ள சூழ்நிலைபற்றியும், சூழ்நிலை காரணமாக எழுகின்ற நடத்தை பற்றியும் விளக்குகிறது” என்பதே அந்தப் புதிய விளக்கம்

உளத்தைப் பற்றி கூறுகிறது என்பது மாறி, மனதைப் பற்றி விளக்குகிறது என்பது மாறி, மனச்சான்று என்பதாக மாறி, இப்போது நடத்தை பற்றி விளக்குகிற இயல் என்பதாக உளவியல் விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கிறது.