பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

விளையாட்டுப் பெருந்தன்மை முதலியவற்றை வளர்த்து விடுகின்றன.

முதன்மை விளையாட்டுக்களை, முழுமை பகுதி முழுமை என்னும் கற்பிக்கும் முறையில் கற்பிக்க வேண்டும்

கற்பிக்கும் முறை

விளையாட்டைக் கற்பிக்கும் முன்னதாக, அதன் தொடக்கம்: தொடக்கத்திற்கான காரணம்; ஆடுகளத்தின் அளவு; ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை; ஆட்டத்தின் நோக்கம், ஆட்டத்திற்குரிய உதவி சாதனங்கள் போன்றவற்றை, ஆசிரியர் தெளிவாக, சுருக்கமாக விளக்கிட வேண்டும்.

மாணவர்களை விளையாடச் செய்கிற போது, ஏற்படுகிற தவறுகளைத் திருத்த வேண்டும். தேவையான போது, விதிமுறைகளையும் விளக்கி, விளையாட்டுக்கான அடிப்படை திறமைகளையும் குறிப்பிட்டுக் கற்பிக்க வேண்டும்.

ஆசிரியரின் தெளிவான செயல் விளக்கம், மாணவர்க்குக் கற்கின்ற ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

மாணவர்களை பல சிறு சிறு குழுக்களாகப் பிரித்து கற்றுக் கொள்ள, பயிற்சி பெற ஆசிரியர் உதவ வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் சென்று, உற்சாகப் படுத்த வேண்டும்.

பிறகு, மாணவர்களை அழைத்து, மீண்டும் அவர்களை குழுவாகப் பிரித்து, முழு ஆட்டத்தையும் ஆட விட வேண்டும்.