பக்கம்:உத்தரகாண்டம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202   ✲   உத்தரகாண்டம்

எரிச்சல் தீர இவள் நீராடுகிறாள். அடுப்பு மூட்டவோ சமைத்துச் சாப்பிடவோ மனமில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். ரங்கனிடம் பூட்டுக்கு வேறு சாவி உண்டு.

அவள் எங்கே போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், பெரிய சாலையில் நடந்து, போகிறாள்.


21

புதிய புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள்... நெருக்கடிகள் குறைந்து, வேற்றூர் செல்லும் வண்டித்தடம் தெரிகிறது. இளவெயில் இதமாக இருக்கிறது.

‘அய்யாவும் அம்மாவும் அவளிடம், வீட்டை விட்டுப் போகிறாயா, தாயம்மா?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு எதுவும் தெரியல. நீங்க காட்டிய சத்தியம் இப்ப என்னை வெளியேறச் சொல்கிறது.

அப்போதுதான் கையில் மாற்றுச் சேலை கூட இல்லாமல் வந்திருப்பது உணர்வில் தைக்கிறது... ‘காஞ்சி’ என்று ஊர் பேர் விளங்கும் பின்புறம் காட்டிக் கொண்டு ஒரு பேருந்து போகிறது.

ஒரு காலத்தில்... இரண்டு புறங்களிலும் பசிய வயல்களாக இருந்தன. இப்படி நல்ல சாலையாக அப்போது இல்லை... ஆனால், இருபுறங்களிலும் ஏதேதோ பேர் போட்ட குடியிருப்புகளுக்காக, வீட்டுமனை எல்லைக்கற்கள் முட்டுமுட்டாகத் தெரிகின்றன.

ஒரு பெரிய சுற்றுச்சுவருக்கு இடையே மேலே வெண்மையான தூபியும் சிலுவைச் சின்னமும் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/204&oldid=1050134" இலிருந்து மீள்விக்கப்பட்டது