பக்கம்:உத்தரகாண்டம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230   ✲   உத்தரகாண்டம்

தோடும்... எனக்குத் தெரிஞ்ச சேட்டு கடயிலதா சீட்டுப் போட்டு வாங்கின. புள்ள கலியாணம் போவல. பேரப்புள்ளிக்குக் காது குத்து வைப்பாங்கன்னு நெனச்சே. ஒருநா பய்ய காருல வந்தா. புள்ள பாத்துக்கணும். தனி வூடு வச்சிகிறேன்னு இட்டுகினு போனா.”

“நீங்க போகலியா?”

“ஒரு வாட்டி போன. நம்ம புரவலர் அய்யா வூட்டுக்குக் கூடதா போவ. அங்க இன்னான்னாலும் கச்சின்னு ஒரு மருவாதி உண்டு. ஒடனே ஃபோன் போட்டு சீட்டு வாங்கிக் குடுத்தாங்க... அங்க மதிக்கலன்னாக்கூட, அட போன்னு வுட்டுடல... என் சம்சாரம்கிறாளே, அவக்கு ஆருமில்ல. எங்க சொந்த ஊரு, திருச்சி பக்கம், சிமிட்டி ஃபாக்டரிக்குப் பக்கம். மானம் பாத்த சீம. சிமிட்டி பாட்டரி கட்டுறப்ப அங்க வேல செய்யிற. பங்காளியோட சண்ட போட்டுட்டு அடிச்சிட்டே. போல்சில சொல்லிடுவான்னு ஓடியாந்தே. இங்க அப்ப லீக்கோ கரி ஏசண்டு ஒருத்தர் இருந்தாரு. அவுரிட்ட மூட்ட செமப்பே. அப்படி உருண்டு வந்த மண்ணாங்கட்டி நானு. மூட்ட செமக்கிற பயலுவல்லாம் குடிப்பானுவ. கண்ட பொம்புள சாவாசமும் வச்சிப்பானுவ. நா... இத இது போல, இப்ப ஏ.ஜி. ஆசுபத்திரி கிதே, அதுக்குப் பின்னால, ஏசன்டு அய்யா வூடு. நாயுடு... ராமம்போட்டுட்டு செழுப்பாருப்பாரு... பீடி சிகரெட்டு ஒண்னும் தொடமாட்டே... காலம பெரி...கெணறு. அதுல தண்ணி எறச்சிக் குளிச்சிப்பேன். வாரத்தில ரெண்டு வாட்டி, சினிமாக்குப் போவ. எம்.ஜி.ஆர். படம்னா, மொத்தல் போவ... கலியாணம் காச்சின்னு நெனக்கல. அப்ப, இவ கலியாணங்கட்டி புருசன் செத்திட்டான். ஆருமில்லாம தா இருந்தா. அப்ப, ரயில் பாலம் புதிசா கட்டுறாங்க. எல்லாப் பொம்புளக கூடவும் போவா வருவா. நா அம்பது கிலோ மூட்டையச் செமந்து வண்டில வைப்பேன். குடோனிலேந்து வாரப்ப, பாப்பா ஒரு நா ராத்திரி பொம்புளகளோடு சினிமா போயிகிது. நானும் அடுத்தாவுல குந்திகிறே. எவனோ இவகிட்ட வம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/232&oldid=1050229" இலிருந்து மீள்விக்கப்பட்டது