பக்கம்:உத்தரகாண்டம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    255

சோகங்களையும் தாங்கிய கீறல்களுடன்... பல்வரிசை பழுது பட்டு... அந்த அநுவா?...

“அம்மா...? என்னம்மா இப்படி? அடையாளமே தெரியலியே? முன்னறைச் சோபாவில் உட்கார்த்தி வைக்கிறாள்.

நிசா குழந்தைகளை அழைத்துச் சென்று, ரொட்டி தயாரிக்க முனைகையில், “நாங்க ரொட்டி சப்ஜி சாப்டாச்சி?” என்று குழந்தைகள் குரல் கேட்கிறது.

“நிசா, அமர் என்னமா ரொட்டி பண்ணுறான்? நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சி. உனக்குப் பரோட்டா பண்ணி வச்சிருக்கிறான் பாரு!”

“அட...?”

நிசா ரொட்டி சப்ஜி தட்டுடன் வருகிறாள்.


26


"நீங்க சாப்பிட்டீங்களா, அம்மாஜி?”

“ஆச்சும்மா. நீதான் மாவு பிசைஞ்சு வச்சிட்டுப் போயிருந்தே. அவன் மடமடன்னு ஃபுல்கா பண்ணிப் போட்டுட்டான். உனக்கு பரோட்டா பண்ணி வைக்கிறேன்னான். வாணாம்பா, அவ வந்தா சூடா பண்ணிப்பான்னேன். கேக்கல. பைங்கன் பர்த்தா பண்றேன்னு பண்ணி வச்சிருக்கு பாரு?” இவளுக்கு பக்கத்தில் குடியிருந்தவருக்கு நண்பராக வரும் சிங் குழந்தைகள், மனைவி நினைவு வருகிறது.

“ஏம்மா, இந்தப் புள்ள யாரு?”

அதற்குள் சைகிளில், கேக், மிக்ஸ்சர் வாங்கிய பையுடன் அமர் வந்து விடுகிறான்.

“டபிய்...? ப்ளம் கேக் வேணுமா, செர்ரி கேக் வேணுமா? இவன் தூக்கிப் பிடிக்குமுன் இரு குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/257&oldid=1050284" இலிருந்து மீள்விக்கப்பட்டது