பக்கம்:உத்தரகாண்டம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270   ✲   உத்தரகாண்டம்

நடக்கும் இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள். சூரனுக்கு ஒவ்வொரு தலையா முளைக்கும். பிறகு, எல்லாம் போகும். மயில் வாகனத்தில் முருகன் அங்கிருந்த வீதிகளில் மட்டும் உலா போவார். இவர்கள் இருந்த தெருவுக்கு வராது. அதனால் சம்பு அம்மா அவர்களை இரவு அழைத்துப் போவாள். அந்த சிவன் கோயில் முன் மைதானத்தில்தான் காங்கிரஸ் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள்... பத்துப் பேர்கூட இருக்கமாட்டார்கள். பயம் தெரியாது. அவளும் கமலியும் உரத்து வந்தே மாதரம் என்று கத்துவார்கள். கமலி இப்போது எங்கு இருக்கிறாள்?

சிறிது நேரம் கூடக் கண்கள் சோரவில்லை. இப்படி இருந்ததே கிடையாது... வாசலில் அடிச் சத்தங்கள் கேட்கின்றன.

பால்வண்டியா போகிறது? பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் தொட்டிகளை அப்படியே இறக்குவார்கள். அருகில் சாக்கடை இருக்கும். வீட்டிலேயே மாடு கறந்தார்கள். இப்போது இல்லை. பின்புறம் நாடார் கடை ஆச்சி மாடு வைத்திருக்கிறாள். அவளிடம் தான் இப்போது உழக்குப் பால் வாங்கி தோய்க்கிறாள்... ஏதேதோ எண்ணங்கள் ஓடுகின்றன...

பேசாமல் கண்ணமங்கலம் போனால் என்ன ?... அழகாயி கோயில் இருக்கும். ஆத்தில் குளித்துவிட்டு அங்கேயே ஏதேனும் வேலை செய்து, பொங்கித் தின்றால் என்ன?...

இரவு முழுவதும் புடைத்த நரம்புகள், மண்டை கனக்கச் செய்கிறது ஊர்... கண்ணமங்கலம் எப்படி இருக்கும்? அய்யாவின் மூதாதையர் ஊர். அங்குதான் அவள் திருமணம் நடந்தது. அழகாயி, ஊர்த் தெய்வம். பக்கத்தில் பாமணி வாய்க்கால். அடுத்த பக்கத்தில் காலம் காலமான பண்ணையடிமைகளின் குடில்கள் இருந்தன. ஊர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/272&oldid=1050350" இலிருந்து மீள்விக்கப்பட்டது