பக்கம்:உத்தரகாண்டம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272   ✲   உத்தரகாண்டம்

அவள் தலையை யாரோ பற்றிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார்...? யாரோ ஒரு பெண்...

அவள் உட்கார முயலுகிறாள். ஏதோ இறுக்கிக் கட்டியிருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து விட்டாற்போல் உடல் வெலவெலத்துத் துவளுகிறது... முருகா...! இது என்ன பயணம்?...

கண்களை மூடி மூடித் திறக்கிறாள்.

“அப்பவே புள்ள வந்து கூட்டபோது மருவாதியாப் போயிருக்கலாம்ல! இப்பபாரு. காலம வந்து பாக்குற. கதவு துறக்கர உள்ள பூட்டிருக்கே. பின்னால வந்து, குதிச்சி, பாத்தா வுழுந்து கெடக்குது. வயிசானாலும் வீம்புல கொறவில்ல...”

ரங்கனின் குரல்தான்.

ஆக, முருகனே இவளை அப்புறப்படுத்துகிறான்.

எங்கே கொண்டு போகிறான் ?

குடிலில், அந்த குண்டு, சப்பை மூக்கியின் ஆளுகைக்கா?

இல்லை... மரகதம் கடித்துத் துப்பும் வீட்டுக்குள்ளா?

“நான் மாபாவி... மாபாவி. பிரும்மசரியம், ஒழுக்கம் எல்லாம் பொய்” என்று சுப்பய்யாவின் குரல் மின்னுகிறது.

“நான் பாவி, மன்னிக்கமாட்டேன்னு சொன்னேன்; நீ மன்னிக்க வேண்டாம்; ஆனால் உனக்கும் மன்னிப்புக் கிடையாதுன்னு போயிட்டார் தாயம்மா!”

அநு அழுகிறாள்.

இவள் எங்கே கொண்டு செல்லப்படுகிறாள்?

உலகத்தில் என்ன அதிசயம் என்று குளத்தில் இருந்த யட்சன் கேட்ட கேள்விக்கு தருமபுத்திரன் என்ன சொன்னான்? நாள் தோறும் உயிர்கள் மடிவதை மனிதன் பார்க்கிறான். ஆனால் தான் வாழ்வதைப் பற்றி கனவுகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/274&oldid=1050352" இலிருந்து மீள்விக்கப்பட்டது