பக்கம்:உத்தரகாண்டம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    279


கதவு திறக்கப்படுகிறது.

கன்னியம்மா இல்லை. ஒட்டு மீசை வைத்துக் கொண்டாற் போல் ஒரு பணியாளன். அவன் மேசையைப் பார்க்கிறான்.

“இன்னா பெர்சு? அதா நாஷ்தா இட்டிலி சட்டினி சாம்பாரு வச்சிகிற, சாப்புடல?...” பிளாஸ்கைத் தூக்கிப் பார்க்கிறான்.

“காபியும் அப்படியே கீது?... மணி ஒண்ணடிக்கப் போவுது. லஞ்ச் அவுரு வந்திடிச்சி. இந்நேரமா தூங்கின?”

“எனக்கு இட்லி காபியெல்லாம் வாணாந்தம்பி... கண்ணம்மா இல்ல? அவளக் கொஞ்சம் வரச் சொல்லுங்க.”

“யாரு அது, பெர்சு?...”

“...அ... கண்ணம்மால்ல, கன்னிம்மா. அவதா எனக்கு எதும் செய்யும்னு டாக்டரம்மா சொன்னாங்க... அவங்க இல்லியா?”

“ஆரு, அர்சிதா மேடமா? அவங்க அய்யா கூட டெல்லிக்கில்ல போயிகிறாங்க?...”

“அவங்க என் பேத்திதா. இவங்க வேறப்பா, நேத்து வந்து பாத்து, மாத்திரை குடுத்தாங்க...”

“ஓ, அவங்களா, அவுங்க உனக்குப் பாத்து மாத்திரை மருந்து குடுத்தாங்களா?”

“ஆமா. அவங்கதா கன்னிம்மாளை இங்க கூட்டி வந்தாங்க. நேத்து தூக்கமாத்திரை குடுத்திட்டாங்க போல இந்நேரம் தூங்கி இருக்கிறேன்.”

“கன்னிம்மா இங்க இல்ல, சிந்தாமணி பங்களாவுக்குப் போயிருக்கும். நான் இப்ப லஞ்ச் கொண்டாறேன். அசுவினி மேடம் ஆபீஸ் ரூமுல இருந்தா சொல்லி அனுப்புறேன்...” என்று சொல்லிவிட்டு நாஷ்தா சமாசாரங்களை எடுத்துப் போகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/281&oldid=1050361" இலிருந்து மீள்விக்கப்பட்டது