பக்கம்:உத்தரகாண்டம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    303

பொறப்படும். விழுப்புரத்துல எறங்கி மாயவரம் வண்டில போங்க!” அவள் இவளிடம் எதுவும் கேட்காமல், சென்ற மறு நிமிடத்தில்லேயே ஒரு பயணச் சீட்டு வாங்கி வந்து கொடுக்கிறாள். நூறு ரூபாய் நோட்டு-"சில்லறை இல்லையே?...”

“பரவாயில்லை.” என்று அவளிடமுள்ள ஆறு பத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறாள். பிறகு அவளை, அங்கு ஒரு பெட்டியில் ஏற்றி விடுகிறாள்.

போலீசு... பொம்பிளைப் போலீசிடம் இவளுக்கு அநுபவம் இல்லை. பார்த்திருக்கிறாள். போலீசென்றால் அஞ்சி ஒளிந்த நாட்கள், ‘போலீசிடம் புடிச்சிக் குடுத்திடு வாங்க’ என்று சொன்ன கன்னியம்மா, எங்கே? நிசமாக போலீசிடம் புடிச்சிக் குடுத்துவிட்டார்களா? முருகா?

கூட்டம் குஞ்சும் குழந்தையும் இளவட்டமும், பளீர் வண்ணங்களுமாக நெருங்குகிறது. அவள் சன்னலடியில் ரயிலடி மேடையை ஆதூரத்துடன் கன்னியம்மாவுக்காகத் துழவும் கண்களுடன் நிற்கையில் மோதித்தள்ளுகிறார்கள். ‘கக்கூசுக்கு’ப் போகும் வழியில், கொழுக்கட்டைக்குள் அவியும் பருப்பு பண்டம் போல் அடைபட்டிருக்கிறாள். வெள்ளை உடுப்பு-பச்சை சிவப்புக் கொடிக்காரர் விரைந்து அடுத்த பெட்டிக்கு முன்னேறுகிறார்... அதோ கன்னிம்மா...

அவள் எப்பிடித்தாவி ஏறினாள் என்று தெரியவில்லை. ஏறிவிட்டாள். படியில் நிற்கும் நாமக்காரர் அவளை இழுத்து உள்ளே தள்ளிவிட்டார். வண்டி வேகம் பிடிக்கையில் அவள் மனம் இறுக்கம் தளர்ந்து லேசாகிறது “கண்ணு, நீ வந்திட்டியா? என்னிய அந்தப் போலீசுகாரம்மா டிக்கெட் வாங்கிக் குடுத்து ஏத்திவுட்டாங்க. நீ எங்கம்மா போயிட்ட?...”

அவள் குரல் அந்தச் சந்தை இரைச்சலில் எடுபடவில்லை. அந்தச் சன நெருக்கடி வாடையில், அழுத்தத்தில், சுடர் விட்ட மனிதநேயம்... நாமக்காரர் பட்டை நாமம், திருப்பதிப் பெருமாளா? சிக்குவாடை வீசும் ஒரு பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/305&oldid=1050421" இலிருந்து மீள்விக்கப்பட்டது