பக்கம்:உத்தரகாண்டம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310   ✲   உத்தரகாண்டம்


புற்றுக்குள் கைவிட்டுவிட்டாளா? பாம்புகள் வந்து சுற்றிக் கொள்கின்றன. கன்னியம்மா ஏதும் பேசவில்லை.

பொழுது நன்றாகவே விடிகிறது. கீழ்வானில் உதயம் சிவந்து, சாலையில் பொற்கிரணங்களைப் படிய விடுகிறது. நம்பிக்கைக் கதிர்கள் அவளை இதமாகத் தடவுகின்றன. ஓரத்து இருக்கை. இருவர் இருக்கை.

“கண்ணமங்கலம் போகுதாப்பா?” குங்குமப் பொட்டளிந்த நடத்துனன், வெளியே இறங்கி வெற்றிலைச் சாற்றைத் துப்புகிறான்.

“புதுக்குடி ரோட்டுல எறங்கிக்க?”

கன்னியம்மாளிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு சீட்டைக் கிழித்துக் கொடுக்கிறான். டிக்கெட்... டிக்கெட்...

“மானரேந்தல், மல்லிகாபுரம் அதெல்லாம் போகாது, நிக்காது. புதுக்குடி ரோட்டுல எறங்கிக்குங்க?”

ஒரு மொட்டைப்பயல் தேநீர் கொண்டு வருகிறான். கன்னியம்மா இரண்டு தேநீர் வாங்குகிறாள்.

பல் விளக்கவில்லை, கழுவவில்லை. தேநீரருந்துகிறாள். கன்னியம்மாளைப் பார்த்துக் கசிகிறாள்.

தாய், தெய்வம். புடம் போட்ட சொக்கத்தங்கம். இவளுக்குத் தனி வழி அச்சம் இல்லை. எந்த முரடனும் எந்தக் காமுகனும் இவளுக்குப் புதிதல்ல... அழகாயியே வந்து இவள் உருவில் அழைத்துச் செல்கிறாளோ?...

புதுக்குடி சாலையில் இறங்குகிறார்கள். வழியில் அசாதாரணமான அமைதி தெரிகிறது. ஓட்டுப் பள்ளிக் கூடச் சுவரில் அசிங்கமான ஆண் பெண் கிறுக்கல்கள் கண்களில் படுகிறது. ஓட்டல், பெட்டிக்கடை, சுவரொட்டி, தட்டிகள் கிழிக்கப்பட்ட கொடும்பாவி எரிக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/312&oldid=1050434" இலிருந்து மீள்விக்கப்பட்டது