பக்கம்:உத்தரகாண்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    63

கலியாணம் கட்டி வச்சேன். அந்தப்பாவி இத்த நிர்க்கதியா நிறுத்திப்பிட்டு, இன்னொருத்திகூட இருக்கிறான்...”

“நிசந்தானா ராசம்மா, நான் கேள்விப்பட்டது?”

“நெசந்தா. பம்பாயில, நல்லா சம்பாதிக்கிறான்; ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு கட்டி வச்சேன். அண்ணி உக்கி உடஞ்சி போயிட்டா. கோர்ட்டுல போட்டு ஜீவனாம்சம் வாங்கலாம்னா, அவன் என்ன வேல செய்யிறான், எங்கே இருக்கிறான்னு ஒரு வெவரமும் தெரியல. நாலு நா முன்ன மதுரையிலிருந்து சிங்காரம் வந்திருந்தான். அண்ணியோட தங்க புருசன். அவன் சொல்லுறான், அந்தப் பொண்ணயும் வச்சிக்கல, அவன் துபாய்கோ எங்கோ போயிட்டாப் புலன்னு சொல்லுறான். அது நர்சாயிருக்காம். ரெண்டு புள்ளீங்க. ‘வாஷில’ இவன் பார்த்தானாம். எங்க போயி இந்தப் பாவத்தக் கொட்டிக்க, சின்னக்கா?”

“தீர விசாரியாம கலியாணம் கட்டிருக்கக் கூடாது. ஒறவாவது ஒட்டாவது? பத்து மாசம் வயித்தில வச்சி நோவும் நொம்பரமும் அநுபவிச்சி, ஒழுக்கமும், சீலமுமா இருக்கிற ஒரு எடத்துல வளத்த பயிரே நச்சுப்பயிரா, மண்டியிருக்கு...”

“ஒண்ணுமே தோணல சின்னக்கா. அவ லீவுல வந்ததும், இது அப்படியே அவன் வாங்கிட்டு வந்த சீலை, பவுடர் அது இதுன்னு குடுத்து உறவாடியதிலை இவந்தா புருசன்னு மயங்கியதும் அண்ணி முன்னால நின்னு எதோ போட்டதப் போடுன்னு கட்டி வைச்சதும்... பம்பாயில வூடு கிடைக்கலன்னு, ஆறு மாசம் குடும்பமில்லாம வூட்டோடயே கழிஞ்சி போச்சி. பெறகுதா விசயம் புரிஞ்சிச்சி. இந்த... தியாகி அய்யாவோட பங்காளி வூட்டு மணிசர், சரவணன், வூடுதேடிவந்து குட்டை உடைச்சாரு. அவுரு எங்க மூத்தாரு வகையில ஏதோ ஒறவு. “அம்மா, அவன் ஏற்கெனவே ஒரு நர்சுகூடத் தொடர்பு வச்சிட்டு ஒரு குழந்தையும் இருக்கும்மா. ரெண்டு பேரும் ஒரே பிளாட்டிலதா இருக்காங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/65&oldid=1049499" இலிருந்து மீள்விக்கப்பட்டது