பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு நற்றிணை முன்னுரையில் சித்தாந்த கலாநிதியவர்கள் தம் வாழ்க்கையின் குறிக்கோளைத் தெள்ளத் தெளிவாகக் குறித்துள்ளார்கள். ஒருகால், கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை யவர்கள், நம் உரைவேந்தரைச் சிதம்பரத்திலுள்ள மீனாட்சி கல்லூரியில் அப்போது முதல்வராய் விளங்கிய பண்டாரகர் உவே. சாமிநாதர்பால் விடுத்துத் தொல்காப்பியச் சொல்ல திகாரத்திற்கு உரிய தெய்வச்சிலையார் உரை, ஏட்டுச் சுவடியை வாங்கிவரச் சொன்னார். சாமிநாதர் அவ்வேட்டைப் பிள்ளையவர்கள் பாற்கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தனர். மேலும், “நீங்களும் ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; உங்களிடம் உரிய தகுதியுளது” எனப் பாராட்டினார். அப்பாராட்டு பிள்ளைக்குப் பேருக்கமூட்டியது. அன்றுதொட்டு உரை எழுதுங்கலையினைச் செம்மையாகச் செய்தனர் உரைவேந்தர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உரைவேந்தரை ஆய்வுத் துறையில் புலவராக ஏற்றுப் பெருமை பெற்றது. அங்கே, 'சைவ சமய இலக்கிய வரலாறு எழுதினார். மூவாயிரத்துக்குக் குறையாத பர்ட வேறுபாடுகளை ஆய்ந்து தக்கதைத் தெளிந்து நற்றிணைக்குப் புத்துரை வரைந்து புத்தமிழ்தாக வெளியிட்டுள்ளார் உரைவேந்தர். சைவசமய இலக்கியத் துறையில் "இரும்புக் கடலை யெனப்பட்ட, ஞான்ாமிர்தம்’ நூலை ஏடுகள் பலவற்றைக் கொண்டு ஆராய்ந்து, பழைய உரைக்கு விளக்கக் குறிப்பெழுதி ஒழுங்கு செய்தனர். அதுவும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்தது. தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், தமிழ்க்கல்லூரியும் அமையப் பெரிதும் பாடுபட்டவருள் குறிக்கத்தக்கவராவார். அவரிடத்தில் உரை வேந்தருக்குள்ள காதலினை இனைத்தென்றுரைக்க வொண்ணாது. அவர் நினைவாக உமாமகேசுவர விரதம்’ இருந்து வந்தார். - உரைவேந்தர் பள்ளியிறுதி வகுப்பில் எவ்வாறு தெளிவானஅழகிய - சிறிய கையெழுத்தினை எழுதினாரோ, அதே வகையில் வடிவம் மாறாமல் இன்றளவும் எழுதுமியல்பினர். காலப்போக்கிற்கேற்ப பலர் கையெழுத்தும் மாறுவதுண்டு. வாழ்வின் நெறியில்மாறாத உறுதியின்ை அறிஞர் பெருந்தகை பெற்றிருத்தல் போன்றே எழுதுதலிலும் உருச்சிதைவின்றி எழுதிவருவர். - r . பன்னெடுங் காலமாகவே கட்டைப் பேனாவினால் மைதொட்டு எழுதிவரும் பழக்கமுடையவர் பேராசிரியர். எந்த வேளையிலும், எந்த நிலையிலும் உரைவேந்தருக்கு எந்த நூலிலிருக்கும் பாட்டும், கருத்தும், சான்றும் மறவாது.