பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மருந்து கலக்கிக் கொடுப்பவரைக் 'கம்பவுண்டர்' என்று சொல்கிறோம்.

'கம்பவுண்டர்' எனும் சொல்லுக்கு, என்ன பொருள் தெரியுமா? சேர்ப்பவர், கலப்பவர், கூட்டுபவர் என்று பொருள்.

'கம்பவுண்டர்' என்ன செய்கிறார்? மருந்து சேர்க்கிறார். அதனாலே அவருக்கு அப் பெயர் வந்தது.

நமது உடல் இருக்கிறதே! இது ஒரு ரசாயனச் சேர்க்கை ! ரசாயனக் கூட்டு-ரசாயனக்கட்டு என்று சொல்கிறது அறிவியல்.

'கெமிக்கல் காம்பவுண்ட்' என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள், அதாவது ரசாயனச் சேர்க்கை! - ரசாயனக் கட்டு. 'யாக்கை' என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்களே!. அது எவ்வளவு பொருத்தமான பெயர்! பொருள் செறிந்த பெயர்!

ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன், சல்பர், பாஸ்பரஸ், இரும்பு, கால்ஷியம், சோடியம், பொட்டாசியம், ஐயோடின், குளோரைன், மக்னீசியம், சிலிகன், ப்ளோரின், ஜிங்க், மாங்கனீஸ், இந்த மாதிரி