பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28. இது வரை என்ன கண்டோம்?

இது வரை என்ன கண்டோம்?

சுமார் முந்நூறு கோடி ஆண்டுகள் முன்பு சூரியன் இல்லை. பிரபஞ்சமானது அந்தகாரத்தில் ஆழ்ந்து இருந்தது. எங்கும் இருள். வாயு நிரம்பியிருந்தது. கன வாயு, உஷ்ண வாயு. அது கனத்தால் அழுத்திற்று.

அந்த அமுக்குதலினால் விரிந்தது; விரிந்து கொண்டே இருந்தது. மேலும் விரியவே, சிதறியது. பல கோளங்கள் தோன்றின. அவற்றில் ஒன்று சூரியன். மற்றவை பிற கிரகங்கள்.

உலகம் அணு மயமானது. அணுக்கள் சூடானால் விலகுகின்றன. இலேசாகின்றன; கன வாயுவாகின்றன. வான மண்டலத்தில் திரிகின்றன. அவை குளிர்ந்தால் நெருங்குகின்றன. திரவமாகின்றன. மேலும் குளிர்ந்தால் இறுகுகின்றன. கட்டியாகின்றன.

அணுவின் தன்மை சும்மா இருப்பது அன்று. எப்போதும் துள்ளிக் குதித்துக் கொண்டு இருப்பதுதான். வான வீதியிலே உள்ள நீர் வாயு அணுக்கள் விநாடிக்கு ஒரு