பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தம் போடமாட்டேன். அபூர்வமாகத்தான் கத்துவேன். என் சத்தம் சிங்கத்தின் கர்ஜூனையைப் போலவோ, கழுதையின் குரலைப் போலவோ, பலமாகக் கேட்காது. ஆட்டுக் குட்டி கத்துவது போல் மெதுவாகத்தான் கேட்கும். அதற்காக எனக்குக் குரலே இல்லை என்று கூறி விடுவதா?

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் “ஒட்டைச் சிவிங்கி தரையில் படுக்கவே படுக் காது. எப்போதும் நின்றுகொண்டே இருக்கும். தூங்கும் போதுகூட நின்று கொண்டுதான் தூங்கும்” என்கிறார்கள். இதுவும் பொய். நான் தரையிலே நன்றாகப் படுப்பேன். என் உடலை மட்டுமல்ல; கழுத்தையும் நன்றாகத் தரையில் நீட்டிக் கொண்டு இளைப்பாறுவேன்.

உங்களிலே பலர் மிருகங்களை வேட்டையாடிக் கொன்று தின்கிறார்கள். அவர்கள் எங்களையும்

விட்டு வைக்கவில்லை, எங்களைச் சாப்பிடுவதற்காக வேட்டையாடினாலும் பரவாயில்லை. ‘போகட்டும். நம் உயிர் போனலும் அவர்கள் வயிறாவது நிரம்புகிறதே!’ என்று ஆறுதல் அடையலாம். ஆனால், சாப்பிடுவதற்காக எங்களை அவர்கள் வேட்டையாட வில்லையாம். எங்கள் மாமிசம் நன்றாக இருக்காதாம். பின்னர் எதற்காக