இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29. பன்னிரண்டு மாதங்கள்
தமிழ் மாதங்கள்
சித்திரை யோடு வைகாசி
- சிறந்த நல்ல இளவேனில் ;
ஆனி ஆடி மாதங்கள்
- அப்பா! மிகவும் முதுவேனில் ;
ஆவணி யோடு புரட்டாசி
- ஆகா! அழகிய கார்காலம் ;
ஐப்பசி கார்த்திகை வந்தாலோ
- அந்தோ மிகவும் குளிர்காலம் ;
மார்கழி மாதம் தைமாதம்
- முன்னே பனிதான் பெய்மாதம் ;
மாசி பங்குனி மாதங்கள்
- பின்னே பனிபெய் மாதங்கள்.
32