பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

201

அந்தப் புத்தகத்தில் கிறிஸ்தவ பெரியவர்கள் தமிழ் உரைநடைக்குச் செய்த அரும் தொண்டை அப்போது தான் ஆழமாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியில் சீகன் பால்குவும், அவரைப்போன்ற தமிழ் அறிஞர்களும் எனது மூதாதையர்கள் என்று நான் ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டுக்காரர்களும் மகிழ்ச்சி ஆரவாரம்-தெரிவித்தார்ள். உண்மைதான். தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்த கிறிஸ்தவ பெரியவர்களை மூதாதைகளாக நினைக்காதவர்களும் கிறிஸ்தவத்தை நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சேர்க்க மறுப்பவர்களும் அரசியல்வாதிகளாக கொடி கட்ட முடியும். ஆனால் முழுமையான எழுத்தாளர்களாகத் திகழ முடியாது.

வழக்கமாக எழுதும் பாதையில் இருந்து இந்தக் கட்டுரையில் சிறிது விலகிவிட்டேனா என்று நினைக்கிறேன். எண்ணிப் பார்த்தால் நான் விலகவில்லை. ஒருவனின் எழுத்துக்கு அவனது அனுபவப் பின்னணியும் ஒரு காரணம் என்பதால் இந்த அனுபவ நினைப்பைப் பகிர்ந்து கொள்கிறேன்.