பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


பட்டது. பதினொரு வேடங்கள் என்று குறிப்பிட்டேனல்லவா? ஒப்பனை முறைகளெல்லாம் நன்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் சாமண்ணா ஐயர் பல்வேறுபட்ட குணங்களையுடைய இந்தப் பாத்திரங்களைத் தாங்கி நடித்ததுதான் மிகவும் வியப்புக்குரியது. பாத்திரங்களின் பெயர்களைக் கேட்டால் நீங்களே வியப்படைவீர்கள். நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பைடு அமீனா, வக்கில், அப்பர்சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய இவ் வேடங்கள் அனைத்தையும் புனைந்து அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவர் பேசி நடிப்பது பிரமிக்கத் தக்கதாக இருக்கும். தமிழ், தெழுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பல்வேறு மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர் அவர். சாமண்ணா ஐயரின் இந்த அபாரமான திறமையை எல்லோரும் பாராட்டினார்கள்.

டம்பாச்சாரி நாடகம், தமிழகத்தில் தன் முதலாக நடிக்கப் பெற்ற சமுதாய நாடகம். இந்த நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதை. தாசியின் மையலில் சிக்கிச் சீரழிந்த ஒருவரின் வரலாறு. இதைப் போன்ற கதைகள் மக்களின் உள்ளத்தில் இன்றுவரை நீங்காது இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம், கடம்பாச்சாரி முதல் “இரத்தக் கண்ணிர்” வரை எத்தனையோ நாடகங்கள் இந்த அடிப்படையிலே எழுதி நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

டம்பாச்சாரி நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. அந்த உதவியுடன் எங்கள் நாடக சபை திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தது. சுவாமிகள் காலமானபோது வந்திருந்தவர்களில் முதலாளி சின்னைய்யாபிள்ளை மீண்டும் மதுரைக்குப் போய் விட்டார். கருப்பையாபிள்ளையும், காமேஸ்வர ஐயரும் கம்பெனியிலே மீண்டும் இடம் பெற்றார்கள். பழனியாபிள்ளையின் உதவியுடன் அவர்களே கம்பெனியை நடத்தி வந்தார்கள். வசூலும் சுமாராக ஆயிற்று. கம்பெனியிலிருந்து விலகிய பல நடிகர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். மனோகரா நாடகம் நடத்தினோம். புதிய நாடகமாதலால் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது.