பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


அவருக்கு இராஜாம்பாள் நாடகத்தில் துப்பறியும் கோவிந்தனை அடிக்கும் ரெளடிகளில் ஒருவனான ‘அம்மாவாசை’ வேடம் கொடுக்கப்பட்டது. சாவித்திரி நாடகத்தில் புண்ணிய புருஷனாக வந்து அருமையாகப் பாடினார்.

சின்னப்பா சிறுவயதில் படுசுட்டியாக இருந்தார். கம்பெனி வீட்டுக்குப் பின்புறம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. சின்னண்ணாவும், சின்னப்பாவும் அவற்றில் ஏறி, இளநீர்க் குலைகளப் பறித்து, எல்லோருக்கும் தானம் வழங்குவார்கள். ஒருநாள் வாத்தியார் குற்றாலலிங்கம்பிள்ளை, சின்னப்பா தென்னைமரத்தில் இருப்பதைப் பார்த்து விட்டார். அவருக்குச் சரியான பூசை கிடைத்தது. அவ்வளவுதான். மறு நாள் சின்னப்பாவைக் காணோம். அவருடைய வீடு தேடிப் போனார்கள். பையன் அடி பட்டிருப்பதைப் பார்த்த அவரது தந்தையார், சின்னப்பாவை அனுப்ப மறுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

டி. பி. இராஜலெட்சுமி நாடகம்.

புதுக்கோட்டை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போனோம். அப்போது காரைக்குடியில் டி.பி. இராஜலட்சுமியின் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நானும், சின்னண்ணாவும் சிற்றப்பாவுடன் நாடகம் பார்க்கப் போயிருந்தோம். அன்று. சாவித்திரி நாடகம். எம். ஜி. நடராஜபிள்ளை சத்தியவாளுகவும். எமதர்மனகவும் நடித்தார். எஸ். வி. சுப்பையா பாகவதர் நாரதராக நடித்தார். அந்த நாளில் டி. பி. இராஜலட்சுமிக்கு, செட்டி நாட்டில் அபாரமான பேர். கடைசி நாடகமானதால் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.

காரைக்குடியில் அப்போதிருந்து வந்த வழக்கத்தையும், நாட்டுக் கோட்டைச் செட்டிப்பிள்ளைகள் நாடகம் பார்க்கும் முறையைப்பற்றி இங்கே சற்று விபரமாகக் குறிப்பிடவேண்டியது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.

காரைக்குடி அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. மற்ற ஊர்களிலெல்லாம் இல்லாத ஒரு புதுமையைக் காரைக்குடியிலே கண்டோம். நாடகக் கொட்டகையில் முதல் வகுப்பு கான்வாஸ்சேர்-அதாவது சாய்மான நாற்காலி,