பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178


லைட்டை'க் கொடுத்துதவும்படியாகக் கேட்டுக் கொண்டார், “வெரைட்டி ஹால் உரிமையாளர் வின்சென்ட் அவர்கள், அன்புடன் உதவிய சினிமா கார்பன் ஆர்க் லைட்டின் ஒளியில் எங்கள் அற்புதக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள்” என்று ஆர்க் லைட்டைக் குறித்துத் தனியாக விளம்பரமும் செய்தார். நாடகம் நடைபெறும்போது ஸ்ரீ ரங்கம் கோவில், காளிவிக்ரஹத்தின் அருகே நடக்கும் கொலை, ருக்மணி பாங்க் ஆகிய முக்கிய காட்சிகளில், மெளனப் படம் காண்பிக்கும் அறையிலிருந்து ஆர்க் லைட்டின் வெளிச்சம் விதவித நிறங்களில் பளிச்சிட்டு ஒளி வீசும், ரசிகர்கள் அந்த நாளில் இந்தச் சாதாரணக் கலர் லைட்டை வியப்போடு பார்த்தார்கள். அந்த லைட் காண்பிக்கப்படும் போதெல்லாம் மசிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் வரவேற்றார்கள்.