பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

வுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்பும் அம்மாவின் மறைவுடன் தீர்ந்தது. இனிக் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெரியண்ணாவின் தலையில் சுமந்தது. சிறு குழந்தை களாக இருந்த இரண்டு தங்கைமார்களைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய கடமையும் அண்ணாவுக் கிருந்தது. எனவே அவர் பழைய வெறுப்பு மனோபாவத்தை விட்டுத் தமது மனைவியுடன் ஒன்றுபட்டிருந்து வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்.

கிட்டப்பா நந்தனார்

நாங்கள் நாடகத்தை நிறுத்தியிருந்த சமயத்தில் எஸ். ஜி. கிட்டப்பாவின் ஸ்பெஷல் நந்தனார் நாடகம் ஒன்று எங்கள் கொட்டகையிலேயே நடந்தது. நாங்கள் எல்லோரும் நாடகம் பார்க்கப் போயிருந்தோம்.

அன்று காயக சிகாமணி ஹரிகேசவகல்லூர் முத்தையா பாகவதரும் உள்ளே எங்களோடு உட்கார்ந்து நாடகம் பார்த்தார். கிட்டப்பா நந்தகைவந்து,அன்று பாடிய அற்புதமான பாடல்கள் இன்னும் என் செவிகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருக் கின்றன. சபையோர் கிட்டப்பாவின் இசையமுதத்தைப் பருகி, மதுவுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடந்தனார் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலே நடிப்புணர்ச்சியைக் கொட்டிப் பாடும் பாவத்தோடு கூடியபாடல்களை நாங்கள் அன்றுதான் கேட்டோம். என் வாழ்நாளில் அப்படிப் பாடிய ஒரு சங்கீத தெய்வத்தை நான் இன்னும் சந்திக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்டிருந்த எண்ணற்ற கவலைகளையெல்லாம் மறந்து, நான்கு மணி நேரம் கிட்டப்பாவின் இசை வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தோம்.

மானேஜரின் துரோகம்

கம்பெனிக்கு நல்ல வருவாய் ஏற்பட்ட காலத்திலெல்லாம் அவற்றை உள்ளிருந்த மனிதக் கரையான்கள் அரித்துத் தின்று கொண்டிருந்தன. மானேஜர் காமேஸ்வர ஐயர் இப்படிச் செய்தவர்களிலே முதல்வர். எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு அவர் காரணமாக இருந்தார். நகைகளை அடகு வைப்பதில் என்னென்னவோ தந்திரங்களைக் கையாண்டார். சில நகைகளைத்