பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் நேராக வாத்தியார் இருப்பிடம் சென்றார். கம்பெனியின் நிலையை உணராமல் அதிகச் சம்பளம் கேட்பது முறையல்லவென எவ்வளவோ எடுத்துக் கூறினார்.

வாத்தியாருக்கும் என். எஸ். கிருஷ்ணனுக்கும் வாக்கு வாதம் வளர்ந்தது. கடைசியாகக் கலைவாணர் வாத்தியாரைக் கண்டபடி பேசிவிட்டு வந்தார். அன்றிரவு மோகனசுந்தரம் நாடகம். முதல் மணியடிக்கும்வரை வாத்தியாரும், எம். கே. ராதாவும் வரவில்லை. பெரியண்ணா சுந்தரமுதலியார் வேடத்தைப் போடத் தொடங்கினார். அந்தச் சமயம் திடீரென்று ராதாவோடு வாத்தியார் வரவே பெரியண்ணா வேடத்தைக் கலைத்துவிட்டு ராதாவையே போடச் சொன்னார், மறுநாள் காலை வாத்தியார் கணக்குத் தீர்த்துக் கொண்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு கம்பெனிக்கு வருவதும் போவதுமாக இருந்த வாத்தியாரின் போக்கு எங்களுக்குப் பிடிக்க வில்லை. இருந்தாலும் என்ன செய்ய முடியும்? மேதைகள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்!