பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258


என். எஸ். கிருஷ்ணனுடன் ஏதேதோ புதிய கேள்விகள் போட்டார். நகைச்சுவை நடிகரானதாலும், ஏற்கனவே சபையோரிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்ததாலும் என். எஸ். கே, ஒருவாறு சமாளித்தார். சாரதாம்பாள் அன்று மிகத் திறமையாக நடித்தார். வேலுநாயருக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை சபையோர் நன்கு ரசித்தார்கள். சத்தியவாகை நடித்த முற்பகுதி முடிந்தது. அடுத்தது எமதர்மன் காட்சி. சித்திரகுப்தனிடம் விசாரணை நடந்தது. சத்தியவான் உயிரைக் கவர்ந்து வரக் கிங்கரர்கள் அனுப்பப் பட்டார்கள். அடுத்து நாரதர் வர வேண்டிய கட்டம். நான் வந்தேன். வேலுநாயர் நாங்கள் வழக்கமாகப் பேசும் வசனங்களையே பேசினார். சுவாமிகளின் பாடத்தை அவர் ஒழுங்காகப் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.

வாக்கு வாதம்

சத்தியவான் உயிரைக் கவராதிருக்கும்படி நாரதர் எம தருமனை வேண்டுகிறார். இருவருக்கும் வாதம் நடைபெறுகிறது. முடிவில் எமன் கோபம் கொள்கிறார். “எட்டி நில்லும் நாரதரே” என்னும் பாட்டு; இதன் பிறகு நாரதர் சபதம் செய்து கொண்டு உள்ளே போகவேண்டும். நாரதருக்கும் எமனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. வழக்கப்படி பேசும் சுவாமிகளின் பாடங்களையே நாயர் பேசி வந்தார். நானும் ஒழுங்காகப் பேசினேன். சுவாமிகளின் பாடம் முடிந்தது. எமன், “என்ன சொன்னீர்?” என்று கூறிப் பாட்டைத் தொடங்க வேண்டும். நாயர், நான் எதிர்பாராதபடி மேலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.

நாரதரின் திணறல்

இம்மாதிரி ஸ்பெஷல் நாடகங்களில் பேசி நன்கு பழக்கமில்லாததால் நான் திணறினேன். நாரதர் திணறுவதைப் பார்த்த நாயர், மேலும் சிரித்துக் கொண்டே பேசினார். எமன் கோபப்பட்ட பிறகு பேச வேண்டிய ஒரே ஒரு வசனம் மட்டும் பாக்கியிருந்தது. ‘ஏ மறலீ! முன்பு மார்க்கண்டனுக்காகச் சிவபெருமானிடம் உதை வாங்கி அவமானப்பட்டதை மறந்து விட்டாயா?” என்ற வசனம் அது. வேறு வழியின்றி எமன் கோபப்படாத நிலையிலேயே,