பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


மோசமாக இருந்திருக்கவேண்டும்! அவருடைய முகத்தில் இனம் தெரியாத ஒரு பீதி குடிகொண்டிருந்தது.

சேலையைக் களையுமாறு துரியோதனன் ஆணையிட்டார். நான் கை நடுக்கத்துடன் துரோபதையின் சேலைத் தலைப்பைப் பிடித்தேன். சாரதாம்பாள் அம்மையார் அப்போது தடித்த அற்புதமான நடிப்பை விவரிக்க இயலாது. “கிருஷ்ணா, கண்ணா, கோபாலா, மாதவா” என்று கதறிக்கொண்டு அவர்கள் இரு கரங்களையும் மேலே உயர்த்திக் கும்பிட்டதும், சுழன்று சுழன்று உடுத்தியிருந்த சேலைகள் லாவகமாக விட்டுக் கொடுத்ததும் எல்லாம் உண்மையிலேயே மாயா ஜாலம்போல் விளங்கின. உண்மையாகவே நாங்கள் பிரமித்துவிட்டோம். அந்தக் காட்சி முடிந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.

வசந்தனின் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் மனோஹரா நாடகம் நடைபெற்றபோது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என். எஸ்.கிருஷ்ணன் மனேஹராவில் வசந்தனாக நடித்தார். பெரும்பாலான நாடகங்களில் அவர் பவுடர் போடும் வழக்கம் இல்லை. இதற்கு விதிவிலக்காக இரண்டொரு நாடகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று மனோஹரா. நகைச்சுவை நடிகர்களில் அநேகர் உச்சிக் குடுமி வைத்துக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்கும் உச்சிக் குடுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த நாளில் கருதப்பட்டு வந்தது. என். எஸ். கிருஷ்ணனும் அப்போது உச்சிக் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். மனோஹராவில் மட்டும் வசந்தனுக்கு ஒரு பழைய ‘டோப்பா’ (பொய்ச் சிகை) வைத்துக் கொள்வது வழக்கம்.

நாடகம் நடந்து கொண்டிருந்தது. வசந்தன் புருஷோத்தம மஹாராஜாவின் ஆடையாபரணங்களையெல்லாம் புனைந்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சி நடந்தது. கலைவாணர் ஒவ்வொரு மனோஹராவின் போதும் புதிது புதிதாக ஏதாவது கற்பனை செய்து நடிப்பது வழக்கம். எனவே பக்கத் தட்டிகளின் மறைவில் நடிகர்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தம ராஜாவின்ஆடை யாபரணங்களுடன் வசந்தன் அவையில் புகுந்தார். ‘திரிலோக