பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. நீடித்து நடத்த முடியாமல் தர்மராஜபிள்ளை ஒரு நாள் சொல்லாமலே போய்விட்டார். நாடகக் கொட்டகைச் சொந்தக்காரர் தம் வாடகைப் பாக்கிக்காகச் சாமான்களை வைத்துக் கொண்டார். காட்சிகள், உடைகள் முதலிய எங்கள் சாமான்கள் கொட்டகையில் இருந்தன. அவை எங்களுடையதென்று கொட்டகைக்காரர் மீது வழக்குத் தொடர்ந்து, அவற்றை மீட்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எப்படியோ ஒரு வகையாகச் சாமான்களை மீட்டு, அவற்றையெல்லாம் ஒருவீட்டில் போட்டு வைத்தோம். புதிதாகச் சேர்ந்திருந்த சில பையன்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் தலையில் சுமந்தது. எல்லோரையும் அனுப்பிவிட்டு, ஊரிலிருந்து புறப்பட்ட எங்கள் சிறிய குழுவுடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினோம்.

பெரியண்ணா மனச் சோர்வு

பெரியண்ணாவுக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. எங்கள் மூவரை மட்டும் ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்துவிட எண்ணினார். சில காலமாவது கம்பெனி நடத்தும் தொந்தரவி லிருந்து நிம்மதி பெற விரும்பினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்குக்கூட எழுதியதாக அறிந்தோம். எவரிடமிருந்தும் அனுகூலமான பதில் வரவில்லை.

இரண்டு மாதகாலம் அமைதியின்றிக் காலம் கழித்தோம். அதற்குள் என். எஸ். பாலகிருஷ்ணன், என். எஸ் வேலப்பன் இருவரும் சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்விட்டார்கள். நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கப் போவதை எதிப்பார்த்து என். எஸ். கிருஷ்ணன் மட்டும் காத்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய உறுதியும் தளர்ந்தது. எல்லோரிடமும் வறுமை தாண்டவமாடியது. தினமும் என். எஸ். கிருஷ்ணன் எங்களைச் சந்திப்பார். கம்பெனியைத் தொடங்கச் சொல்லி வற்புறுத்துவார். ஒருநாள் பெரியண்ணா, எங்களுக்காக நீ காத்திருக்க வேண்டாம். எந்தக் கம்பெனியிலாவது சேர்ந்து கொள். பிறகு நாங்கள் கம்பெனி தொடங்கும்போது உன்னை அழைத்துக்கொள்