பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302


முடித்ததும் ராஜாவின் கண்கள் என் மீசை மீது விழுந்தன. அதிலும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மீசையையும் திருத்த ஆரம்பித்தார். கத்தரிக்கோலை மூக்கருகில் கொண்டுவந்தார். “அசையாமல் இரு” என்றார். மாற்றி மாற்றி சரிபார்த்தார். இரு புறமும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே போனார். இறுதியாகக் குரங்கு அப்பம் பங்கு வைத்தகதையாய் ஒட்டுமீசை வைக்கவேண்டி வருமோ என்று நான் பயந்தேன். என் அதிர்ஷ்டம் அப்படி ஏற்படவில்லை. முன்பொரு நாள் இதே மாதிரி நாவிதர் இல்லாத சமயத்தில் எங்கள் நடிகர் ஒருவருக்கு ஸ்டுடியோவில் உள்ள வறட்டுக் கத்தியால் ராஜா சவரம் செய்ய முனைந்தபோது எங்களுக்கெல்லாம் பயமாக இருந்தது. அந்த மாதிரி ஒருநிலை எனக்கு ஏற்படாததை எண்ணி உள்ளுர மகிழ்ச்சி யடைந்தேன்.