பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327

 தேசியவாதிகள் அமைச்சர்களாக இருக்கும் நேரத்தில் தேசீய நாடகங்களுக்குத் தடையா? எங்கள் உள்ளம் குமுறியது. திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரின் பெயர் ராமமூர்த்தி என்று நினைவு. அவருடைய போக்கைக் கண்டித்து எங்கள் சார்பில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறை வேற்றியது. சுதந்திரச்சங்கு என்னும் பெயரால் அப்போது சென்னையில் நடைபெற்று வந்த காலணா வார இதழ், கலெக்டரின் செயலைக்கண்டித்துத் தலையங்கம் எழுதியது. கல்லிடைக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமதி லட்சுமி சங்கரய்யர் எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டார். எதுவும் பயனளிக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செலுத்துகிறது; ஆனால் மாவட்டத்தில் கலெக்டர் ஆதிக்கம் செலுத்துகிறார்! நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம். நாடகத்தின் தடை நீங்கவே இல்லை. அப்போது விளம்பர அமைச்சராக இருந்த திரு. எஸ். ராமநாதன் எங்கள் பழைய நண்பர். நாங்கள் பெரியார் அவர்களோடு தொடர்பு கொண்ட நாள் முதலே எஸ்.ராமநாதனோடும் நெருங்கி பழகினோம். அவரும் எங்கள் தேசப்பக்தியைப் பார்த் திருக்கிரு.ர். எனவே, அவருக்குத் தனிப்பட்ட முறையில் நிலைமையை விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.

அதற்கு அவர் ஆறுதல் கூறிப் பதில் எழுதியிருந்தார். தங்களுக்கிருக்கும் தற்போதைய அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதாக அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தேசபக்தியையும் கதரின் வெற்றியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த ஊரிலும் நடத்த முடியாமலை போய் விட்டது. அப்போது எட்டையபுரம் இளைய ராஜா அவர்களின் கம்பெனியிலிருந்த சில நடிகர்கள் எங்கள் குழுவில் சேர்க்கப் பெற்றார்கள், அவர்களில் டி. வி. நாரயணசாமி, பி. எஸ் வேங்கடாசலம், எஸ். பி. வீராச்சாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

சுசீந்திரம் கோமதி

முதலாவதாக எங்கள் கம்பெனியில் இருந்த நடிகை, நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதனின் தங்கை மீனாட்சி. இவ