பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329

 பதுபோல நாடகம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் தாங்கள் நாடகங் களுக்கு அனுப்பி விடுகிறோம். தயவு செய்து அனுமதியுங்கள்” என்று உருக்கமாக எழுதினார். ரங்கராஜு அதற்கு எழுதிய பதில் சிறிதும் அனுதாபம் இல்லாததாகவும் கடுமையானதாகவும் இருந்தது.

“ராயல்டித் தொகையைச் சிறிதும்குறைத்துக் கொள்ளமுடி யாது. முழுத்தொகையையும் முன் பணமாக அனுப்பிவிட்டுத் தான் நாடகம் நடத்த வேண்டும். அதற்கு இஷ்டமில்லா விட் டால் என் நாடகத்தை நிறுத்திவிடலாம்.”

இவ்வாறு எழுதப் பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் கடிதத்தைக் கண்டதும் எங்கள் மனம் சொல்லொன வேதனை அடைந்தது. நாங்கள் நால்வரும் நீண்டநேரம் விவா தித்தோம். இறுதியாக இனிமேல் என்றுமே ரங்கராஜுவின் நாடகங்களை நடிப்பதில்லை யென்று முடிவு செய்தோம். அதே வேகத்தில் புதிய சமுக நாடகங்களை நடத்தத் திட்டமிட்டோம்.

தலைவர் காமராஜ் தலைமை

அரசியல் தலைவர்கள் பல்வேறு கட்சியினராயினும் அவர்கள் அனைவருடனும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமுண்டு. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று சில லட்சியங்களைக் கடைப் பிடிப்பவன் நான். அவற்றுக்கு மாருன கருத்துக்கொண்டவர் களோடும் நான் பகைமை கொள்வதில்லை. பண்புடனேயே பழகு வேன். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடம் எனக்குப் பெரு மதிப்புண்டு. அந்த வகையில் தலைவர் காமராஜ் அவர்களிடமும் மட்டப்பாறை வெங்கட்ராமையர் அவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன். தலைவர் காமராஜ் அவர்களைத் திண்டுக்கல்விலுள்ள எங்கள் நண்பர் திரு கருப்புச்சாமி அவர்களின் கதர் கடையிலேயே அடிக்கடி சந்தித்து உரையாடியதுண்டு. திண்டுக்கல் தங்கரத்தினம், நீராம் சேஷன், நகரமன்றத் தலைவர் பி. வி. தாஸ், மணிபாரதி, கணேசய்யர் போன்ற தேசீயப் பற்று டைய நண்பர்களோடெல்லாம் எங்களுக்குப் பழக்கமுண்டு. பொதுவாக எங்களுக்கு நண்பர்கள் அதிகம் நிறைந்த நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்று எனச் சொல்லலாம்.