பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339


பெரிய பெரிய விளம்பரங்களிடையே நாடக விளம்பரம் மங்கியது. நாடகங்களுக்கு நல்ல பேர். ஆனால் அதற்கு தக்க வருவாய் இல்லை. கண்கவர் காட்சிகளையும் வனப்பு மிக்க உடைகளையும் மக்கள் விரும்பினார்கள். ஆடம்பரமும் விளம்பரமும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். சீர் திருத்த தேசீய நாடகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாப் போட்டியைச் சமாளிக்க இயலவில்லை. எனவே வருவாய் முழுவ தையும் செலவிட்டு ஸ்ரீ கிருஷ்ண லீலாவைத் தயாரித்தோம். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதற்கொப்ப பழைய கிருஷ்ண லீலாவுக்குப் புது மெருகிட்டோம். நாடகம் ஆடம்பரத் தோடு அரங்கேறியது.

தினசரி நாடகம்-தரை இரண்டணா

மாதம் பதினைந்து நாடகங்கள் நடத்துவது தான் வழக்கம். செலவினங்கள் அதிகரித்ததால் பல கம்பெனிகள் தினசரி நாடகம் நடத்தும் முறையைக் கையாண்டன. அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதால் நீண்ட காலமாக நாங்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் கால வெள்ளம் எங்களையும் அதில் இழுத்துச் சென்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலா ஆம்பூரில் தினசரி நாடகமாக நடந்தது. அதுவரை நான்கணாவுக்குக் குறைவாகக் கட்டணம் போட்டதே இல்லை. ஸ்ரீ கிருஷ்ண லீலாவுக்குத் தொடக்கத்திலிருந்தே தரைக்கு மட்டும் இரண்டணா கட்டணம் வைத்தோம். கட்டணம் இரண்டணா என்றதும் தாய்மார்கள் கூட்டம் பிரமிக்கக்கூடிய அளவுக்கு வந்து கொட்டகையை முற்றுகையிட்டது. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த ஓய்வு கிருஷ்ண லீலாவில் கிடைத்தது. நானும் டிக்கட் விற்கும் அறையில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைக்கு உதவியாக டிக்கெட் விற்றேன். ஜனங்கள் கட்டம் சொல்லி முடியாது. எங்களுக்கு வேறென்ன வேண்டும்? ஒரே குதூகலம்!

திறமை மிக்க நடிகர்கள்

கம்பெனியிலிருந்த நல்ல நடிகர்களின் திறமை ஸ்ரீ கிருஷ்ண லீலாவில் பரிமளித்தது. அப்போது பாஸ்கரன், கருணாகரன்,