பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

 நாடகத்தைத் திரைப்படத்திற் கேற்றவாறு எழுதும்பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தார். கே. வி. சீனிவாசன், சதிலீலாவதி பட டைரக்டர் ஏல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்றவர். அவர் கம்பெனியில் இருந்து கொண்டே சின்னண்ணாவுக்கு ஆதரவாகப் பெரியண்ணா உட்பட எங்கள் எல்லேருடைய அபிப்ராயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கோவையிருந்து பூலோக ரம்பை படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. 20.1-40இல் ஷண்முகா பிலிம்ஸ் எம். சோமசுந்தரம் சேலம் கந்தசாமி செட்டியார் நடிகை கே. எல் வி. வசந்தா ஆகியோர் திண்டுக்கல் வந்து பூலோகரம்பையில் நடிக்க எனக்கு மூன்றுமாத காலத்திற்கு ரூ.3750 சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்துச் சென்றார்கள் நெருக்கடியான நேரத்தில், கிடைத்த இந்தப்பணம் தெய்வம்தந்த வரப்பிரசாதமாக இருந்தது.

‘நாஷ்’ கார் வாங்கினோம்

பூலோக ரம்பை படப்பிடிப்புக்காக அடிக்கடி கோவைக்குப் போய் வர ஒரு கார் தேவைப்பட்டது. அதைக் கம்பெனிக்குச் சொந்தமாகவே வாங்குவதென முடிவுசெய்தார் அண்ணா. காரைக்குடியிலிருந்த எங்கள் நண்பர் மெக்கானிக் சங்கர் நாயுடு இதற்கு உதவினார், 30-1- 40 இல் ஒரு பழைய ‘நாஷ்’ கார் 1225 ரூபாய்களுக்கு வாங்கப்பட்டது. அப்போது நான் முக்கிய பாத்திர மேற்று நடிக்காத நாடகம் ஸ்ரீகிருஷ்ணலீலா ஒன்று தான். எனவே அந்த நாடகத்தைத் தொடங்கிவிட்டு, என்னைக் கோவைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் அண்ணா.

6 . 2. 40 இல் பூர் கிருஷ்ணலீலா தொடங்கியது. பூலோக ரம்பைபடத்தில் நடிப்பதற்காக அன்றிரவு 7மணிக்கு நான் காரில் கோவைக்குப் புறப்பட்டேன். இரவு 10 மணியளவில் ஈரோடு வந்து, எனது இனிய நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் தங்கினேன். மறுநாள் பகல் பெரியார் ஈ. வே. ரா அவர்களின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் நான்படத்தில் நடிக்க இருப்பதைப் பாராட்டும் முறையில் எனக்கு விருந்தளித்தார். இந்த விருந்தில் அறிஞர் அண்ணா, தோழர்கள் எம். ஏ. ஈஸ்வரன்,