பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362


வரதக்ஷிணையின் குரூரம்: மண அறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளை விட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்’ தருகிறாள்-அதாவது அந்த நாடகத்தில் உண்டு.”[1]

இவ்வாறு விமர்சனத்தைத் தொடங்கி ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் விரிவாகப் எழுதிவிட்டு இறுதியில் “பல நாட்களில் நான் கண்டறியாதன இதில் கண்டேன். நான் கண்டதைச் சுருக்கித் தான் எழுதினேன். முழுவதையும் நீங்கள் காணவேண்டுமே; ஈரோடு வாசிகள் இன்றே செல்லுங்கள். மற்ற ஊரார் அழைப்பு அனுப்புங்கள் கம்பெனிக்கு. குமாஸ்தாவின் மகள் சினிமாவாகவும் வரப் போகிறது. கவனம் இருக்கட்டும்!!” என்று முடித்திருந்தார். இந்த விமர்சனம் எங்கள் நடிகர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் ஊட்டியது. பலமுறை படித்துப்படித்துச் சுவைத்தோம்.

ஈரோடு நண்பர்களுக்கெல்லாம் ஒரு இனிய விருந்து நடத்தி னார் பெரியண்ணா. இதில் பெரியார் ஈ. வே. ரா,அறிஞர் அண்ணா, டாக்டர் கிருஷ்ணசாமி, எம். ஏ. ஈஸ்வரன் முதலிய அனைவரும் கலந்து கொண்டனார்.

வியக்கத் தக்க நடிப்பு

குமாஸ்தாவின் பெண்ணில் கதாநாயகி சீதாவாக நடிக்க திருமதி எம். வி. ராஜம்மா ஏற்பாடு செய்யப்பட்டார். இவர் நாடகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார். திரைப்பட விநியோக உரிமையைப் பெறுவதற்காக முன் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். 30-6.40 இல் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு எஸ்.எஸ்.வாசன், நாராயண ஐயங்கார், சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு, மூர்த்தி பிலிம்ஸ் மருதாசலம் செட்டியார், எம். வி. ராஜம்மா, பெரியார் ஈ. வெ. ரா. அறிஞர் அண்ணா முதலியோர் வந்திருந்தனார். அன்று


  1. இவ்விமர்சனம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வெளியிட்டுள்ள நாடக உலகில் அண்ணா என்னும் நூலில் உள்ளது.